இன்று காஷ்மீர் செல்கிறார் அமித் ஷா.. முக்கிய ஆலோசனை நடந்த திட்டம்
ஜம்மு காஷ்மீரில் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து முதல்முறையாக பாஜக தலைவர் அமித் ஷா அங்குள்ள பாஜக உறுப்பினர்களை சந்திக்க செல்கிறார்.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து முதல்முறையாக பாஜக தலைவர் அமித் ஷா அங்குள்ள பாஜக நிர்வாகிகளை சந்திக்க செல்கிறார்.
ஜம்மு காஷ்மீரில் ஆளும் பாஜக - மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) இடையிலான கூட்டணி உடைந்தது. இதனால் அங்கு மெஹபூபா முப்தி தலைமையிலான கூட்டணி ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது.

தற்போது அங்கு ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.அங்கு ஆளுநர் ஆட்சிக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
காஷ்மீரின் தற்போதைய கவர்னர், நரிந்தர் நாத் வோராவின் பதவிக்காலம் இன்னும் 4 நாட்களில் முடிவடைகிறது. அதன்பின் அவரின் பதவிக்காலம் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்படலாம்.
இந்த நிலையில் அங்கு என்ன நடக்க போகிறது என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் சமயத்தில், இன்று பாஜக தலைவர் அமித் ஷா, காஷ்மீர் செல்கிறார். அங்கு பாஜக நிர்வாகிகளை அவர் சந்திக்கிறார்.
காஷ்மீரில் அடுத்து நடக்க போகும் முக்கிய அரசியல் மாற்றங்கள் குறித்து அவர் பேச இருக்கிறார். என்ன மாதிரியான, முடிவுகள் எடுக்கப்படும் என்று இன்னும் விவரம் வெளியாகவில்லை. இன்னும் சில பாஜக தேசிய நிர்வாகிகளும், அமித் ஷாவுடன் செல்ல இருக்கிறார்கள்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு?












Click it and Unblock the Notifications