இதுதான் அமித்ஷாவின் மறுபக்கம்.. தினமும் ஏழைகளுக்கு இலவச உணவு! தாய் மீது எவ்வளவு பாசம் பாருங்க.. செம
காந்திநகர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத்தில் உள்ள தனது சொந்த ஊரில் தாயாரின் நினைவாக தினமும் ஏழைகளுக்கு உணவு வழங்கி வரும் தகவல் வெளியாகி உள்ளது.
பாஜகவில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக இருப்பவர் அமித்ஷா. அக்கட்சியின் தேசிய தலைவராக இவர் சிறப்பாக செயல்பட்டார். இன்னும் சொல்லப்போனால் பாஜகவில் ‛தேர்தல் சாணக்கியர்' என்றே பலரும் அமித்ஷாவை அழைத்து வருகின்றனர்.

அமித்ஷா தற்போது பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறையை நிர்வகித்து வருகிறார். அமித்ஷாவும், பிரதமர் மோடியும் குஜராத்தை சேர்ந்தவர். இருவரும் குஜராத் அரசியலில் சேர்ந்து செயல்பட்டு வந்த நிலையில் தற்போது தேசிய அரசியலும் இணைந்தே செயல்பட்டு வருகின்றனர்.
அமித்ஷா தற்போது மத்திய அமைச்சராக இருந்தாலும் கூட பல மாநிலங்களில் தேர்தல் பணிகளின்போது முக்கிய வியூகங்களை வகுத்து கொடுத்து வருகிறார். இந்நிலையில் தான் மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது அமித்ஷா தனது தயாரின் நினைவாக குஜராத்தில் உள்ள தனது சொந்த ஊரில் இலவசமாக தினமும் உணவு வழங்கி வருகிறார்.

அதாவது அமித்ஷா குஜராத்தின் மான்சா பகுதியை சேர்ந்தவர். இவர் சிறுவயதில் இருந்தே தனது தாய் குசும்பென் ஷா மீது அதிக அன்பு வைத்திருந்தார். இந்நிலையில் தான் உடல்நலக்குறைவால் கடந்த 2010ல் அமித்ஷாவின் தாயார் குசும்பென் ஷா காலமானார். இதையடுத்து அமித்ஷா தனது சொந்த ஊரான மான்சாவில் தாயாரின் நினைவாக 'குசும்பா அன்ன க்ஷேத்ரா' கிச்சன் என்பதை நடத்தி வருகிறார்.
இந்த கிச்சனில் இலவசமாக உணவு சமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஏழைகள் உள்பட உணவு தேவைப்படுவோர் இந்த 'குசும்பா அன்ன க்ஷேத்ரா' கிச்சனுக்கு சென்று இலவசமாக உணவு சாப்பிட்டு வருகின்றனர். இந்த கிச்சன் மூலம் தினமும் ஏராளமான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இதற்கிடையே தான் இன்று அமித்ஷா தனது குடும்பத்துடன் அந்த கிச்சனுக்கு சென்றார்.

அதன்பிறகு அமித்ஷா மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த சிறுவர், சிறுமிகள், ஏழை மக்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டனர். அதன்பிறகு அங்கு வந்திருந்த அங்கன்வாடி மாணவர்களுகு்கு அமித்ஷா பொம்மைகள் உள்பட பல்வேறு பொருட்களை வழங்கினார். இதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அமித்ஷாவின் இந்த செயலை பாஜகவினர் பாராட்டி வருகின்றனர்.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications