For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

20 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை- தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா

Google Oneindia Tamil News

Recommended Video

    20 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததில்லை

    புவனேஸ்வரம்: 20 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததில்லை என தேர்தல் பிரசார கூட்டத்தில் அமித்ஷா தெரிவித்தார்.

    ஒடிஸா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடத்தப்படுகிறது. 4-ஆவது கட்டத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. அந்த மாநிலத்தின் ஜாஜ்பூர் தொகுதியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டார்.

    திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி காலமானார் திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி காலமானார்

    அதிகாரி

    அதிகாரி

    அப்போது அவர் பேசுகையில் பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ, எம்பிக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நிதி நிறுவன மோசடி மற்றும் சுரங்க முறைகேடுகளில் தொடர்பு உண்டு. ஆனால் அவர்களோ சுதந்திரமாக நடமாடி கொண்டிருக்கிறார்கள்.

    ஒடிய மொழி

    ஒடிய மொழி

    ஒடிஸாவில் பாஜக ஆட்சி அமைந்தால் இந்த குற்றவாளிகளை 3 மாதங்களுக்குள் சிறையில் அடைக்கப்படுவர். முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு ஒடிய மொழியே தெரியாது.

    மக்கள் தேர்வு

    மக்கள் தேர்வு

    கடந்த 20 ஆண்டுகளில் அவர் அதை கற்றுக் கொள்ளவும் இல்லை. எனவே அந்த மொழி தெரிந்த மாநிலத்தின் பிரச்சினைகளை அறிந்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய ஒரு முதல்வரைத்தான் மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.

    விடுப்பு

    விடுப்பு

    பிரதமர் மோடி தினமும் 18 மணி நேரம் பணியாற்றுகிறார். கடந்த 20 ஆண்டுகளில் அவர் ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததேயில்லை. ஆனால் ராகுலோ இரு மாதங்களுக்கு ஒரு முறை விடுமுறை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு சென்றுவிடுகிறார் என்றார் அமித்ஷா.

    English summary
    Amit Shah says that PM Narendra Modi never take leave for the past 20 years. He works more than 18 hours/ day for the nation's welfare.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X