சோம்நாத் கோவில் அறங்காவலராக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நியமனம் !
டெல்லி: புகழ்பெற்ற சோம்நாத் கோவிலின் அறங்காவலராக பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குஜராத்தின் சோம்நாத் சிவன் கோவில் புகழ்பெற்ற இந்து ஆலயங்களில் ஒன்று. வரலாற்று காலங்களில் பல முறை படையெடுப்புக்குள்ளானது. தற்போதைய சோம்நாத் கோவிலானது 1947ஆம் ஆண்டு முதல் 1951ஆம் ஆண்டு வரை கட்டப்பட்டு ஜனாதிபதியாக இருந்த ராஜேந்திர பிரசாத்தால் திறந்து வைக்கப்பட்டது. இந்துக்களின் 12 புனித சிவாலயங்களில் இதுவும் ஒன்று.

இந்தக் கோவிலின் டிரஸ்ட்டில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடியின் டெல்லி இல்லத்தில் சோம்நாத் கோவில் அறங்காவலர்கள் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, பி.கே. லெஹரி, ஹர்ஸ்வர்த்தன் உள்ளிட்ட அறங்காவல் குழுவினர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் சோம்நாத் கோவில் அறங்காவல் குழு தலைவராக கேசுபாய் பட்டேலுக்கு மேலும் ஒரு வருடம் நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதனிடையே சோம்நாத் கோவில் அறங்காவலராக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நியமனம் செய்யப்பட்டார்.
சோம்நாத் கோவிலை ஒரு முதன்மையான சுற்றுலா தலமாக முன்னேற்றுவதன் அவசியம் குறித்து பிரதமர் மோடி வலியுறுத்தினார். இது தொடர்பாக ஒரு மெய்நிகர் கலை அருங்காட்சியகம் மற்றும் கலையரங்கம் உருவாக்குவது. சோம்நாத் கோவில், டையூ மற்றும் சிங்கங்கள் அதிகமுள்ள கிர் தேசிய பூங்கா ஆகியவற்றை இணைத்து ஒரு சுற்றுலா வளையத்தை உண்டாக்கவும் மோடி ஆலோசனை வழங்கினார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications