சர்ப்ரைஸ் தந்த பாஜக.. குஜராத்தை கொத்தோடு அள்ளி.. 25 தொகுதியில் அபார வெற்றி! அமித்ஷாவும் அசத்திட்டாரு
காந்தி நகர்: குஜராத் மக்களவை தேர்தலில் வெல்ல போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறிய நிலையில், அபார சாதனையை பாஜக பெற்றுள்ளது.. அத்துடன், காந்தி நகர் தொகுதியிலும் அமித்ஷா பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
குஜராத்தை பொறுத்தவரை, 88.57 சதவீதம் இந்துக்கள் ஓட்டுக்களே பிரதானமாக இருக்கின்றன.. குஜராத்தை அதிக காலம் ஆட்சி செய்த கட்சியாக காங்கிரஸ் விளங்குகிறது என்றாலும், தற்சமயம் பாஜகவின் பிடியிலேயே இம்மாநிலம் இருந்து வருகிறது.

அந்தவகையில், கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக, பாஜக இந்த குஜராத்தை ஆண்டு கொண்டிருக்கிறது.. இதன்மூலம் இந்த மாநிலத்தை அதிக காலம் ஆட்சி செய்த முதல்வர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் நரேந்திர மோடி.. பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால், பாஜகவுக்கு இது கூடுதல் பலத்தை தந்து வருகிறது.
குஜராத்: அதுமட்டுமல்ல, கடந்த 2014, 2019 எம்பி தேர்தல்களில், குஜராத்தில் உள்ள 26 நாடாளுமன்றத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. மேற்கண்ட 2 தேர்தல்களிலும் பாஜக 60 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்த வரலாறும் உண்டு. ஆனால் காங்கிரஸ் அப்போதிருந்தே சரிவை நோக்கி பயணிக்க துவங்கிவிட்டது.
இப்போது, வழக்கம்போல் குஜராத்தில் வெற்றி பெற பாஜக முயன்று வருகிறது.. இதில் சூரத் தொகுதியை பொறுத்தவரை, பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதே பாஜகவுக்கு கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த முறை வழக்கம்போல் பாஜக தனித்து களம் கண்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியோ முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளது.. காங்கிரஸ் 24 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 2 தொகுதிகளிலும் களம் போட்டியிட்டன.. பாஜகவின் வெற்றியை முறியடிக்கும் வகையில், இந்த 2 கட்சிகளும் ஒன்றிணைந்தாலும், அது போதுமான பலனை தராது என்றெல்லாம் கூறப்பட்டன.
கணிப்புகள்: காரணம், இந்த லோக்சபா தேர்தலை முன்னிறுத்தியே, 10-க்கும் மேற்பட்ட கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டிருந்தன. அந்த அனைத்துக் கருத்து கணிப்புகளுமே, 26 தொகுதிகளிலும் பாஜகவே வெற்றி பெறும் என்று கூறப்பட்டிருந்தன..
அதாவது, பாஜக 64 சதவீதம் வாக்குகளை பெறலாம் என்றம், காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி குறைந்தபட்சம் 35 சதவீதம் வரை வாக்குகளை பெறலாம் என்றும் கணிப்புகள் வெளியாகியிருந்தன. எனவே, இது பாஜகவுக்கு கிடைத்த 2வது வெற்றியாக பார்க்கப்பட்டு வருகிறது.
தபால் ஓட்டுக்கள்: இப்படிப்பட்ட சூழலில், இன்றைய தினம், தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.. இதில் தபால் ஓட்டுக்கள் முதலில் எண்ணப்பட்டு வரும்நிலையில், பாஜகவே முன்னிலை வகித்து வருகிறது.. குஜராத் மாநிலம் காந்தி நகரில் போட்டியிடும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆரம்பத்திலிருந்தே முன்னிலை பெற்றுள்ளார்.
அமித்ஷா: இன்று காலை 9.45 மணியளவில் நடைபெற்ற தபால் ஓட்டுக்களில், பாஜகவுக்கு 22 இடங்கள் கிடைத்தன.. காங்கிரஸ் கட்சியோ வெறும் 4 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்திருந்தது..
11 மணி நிலவரப்படி, 25 இடங்களில் பாஜக முதலிடத்தையே பிடித்து வருகிறது.. காங்கிரஸ் 1 இடத்தை மட்டுமே கைப்பற்றியுள்ளது.. வாக்கு எண்ணிக்கை துவங்கியதிலிருந்தே, காந்தி நகரில் போட்டியிட்டிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொடர்ந்து முன்னிலையிலேயே இருந்தார்.
இதையடுத்து, 12 மணி நெருங்கும் தருவாயில், அமித்ஷா அபாரமான வெற்றியை பெற்றுள்ளார்.. ஆரம்பம் முதலே ஏராளமான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்த அமித்ஷா, கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் வாக்கு வித்தியாசங்களில் முன்னிலை வகித்து வந்தார்.
ஆரம்பம் முதலே குஜராத்தில் பாஜக முன்னிலை வகித்து வந்தது.. இறுதியில், மொத்தமுள்ள 26 தொகுதியில், 25 தொகுதிகளில் பாஜக அமோக வெற்றி பெற்றிருக்கிறது.. பனஸ்கந்தா என்ற ஒரு தொகுதியில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.. அந்தவகையில், 61.86 சதவீத ஓட்டுக்களை பெற்றுள்ளது.. காங்கிரஸ் கட்சியோ 31.24 சதவீதம் பெற்றிருக்கிறது. ஆனால், மோசமாக மண்ணை கவ்வியிருக்கிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications