Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிறிஸ் கெய்லிடம் மன்னிப்பு கேட்ட அமிதாப் பச்சன்: எதற்கு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயிலிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகிறது. கடந்த புதன்கிழமை மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து அணிகள் மோதிய ஆட்டம் மும்பையில் நடந்தது. அந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் 48 பந்துகளில் 100 ரன்களை குவித்தார்.

அவர் 100 ரன்கள் எடுத்த அழகை பற்றி தான் கிரிக்கெட் ரசிகர்கள் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் போட்டி மும்பையில் நடந்தும் நேரில் வந்து பார்க்காததற்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கிறிஸ் கெயிலிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது குறித்து அமிதாப் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அபாரம் கிறிஸ் கெயில்! மும்பையில் உங்களை சந்தித்து என் பாடல்களை நீங்கள் பாடி கேட்க முடியாமல் போனதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். போட்டியை பார்த்தேன். வாவ் என்று தெரிவித்துள்ளார்.

அமிதாபின் ட்வீட்டுக்கு கெய்ல் போட்ட பதில் ட்வீட்டில் கூறியிருப்பதாவது,

நாம் நிச்சயம் சந்திக்கலாம். சியர்ஸ் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+