அமிதாப்பச்சனுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பத்ம விபூஷன் விருது வழங்கினார்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்தார்.
நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அமிதாப் பச்சானுக்கு பத்ம விபூஷன் விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்த மல்லூர் ராமசாமி சீனிவாசன், பொது விவகாரங்களில் சேவை செய்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆகியோருக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
இதேபோல் பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளையும் ஜனாதிபதி பிரணாப் விருது வழங்கி சிறப்பித்தார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் அமிதாப்பின் மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications