உன்னதமான இந்தியாவின் புதிய தூதராக நடிகர் அமிதாப் பச்சன் நியமிக்கப்பட வாய்ப்பு !
டெல்லி: இந்திய சுற்றுலாத்துறையை பிரபலப்படுத்தும் நோக்கில் உன்னதமான இந்தியா (incredible india) என்ற பிரச்சார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் புதிய தூதராக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் 'உன்னதமான இந்தியா' என்ற திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளம்பர தூதராக பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர்கான் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் சுற்றுலாத் துறையின் தூதர் பொறுப்பில் இருந்து ஆமிர்கானை சுற்றுலாத்துறை அமைச்சகம் நீக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், உன்னதமான இந்தியா திட்டத்திற்காக விளம்பர நிறுவனமான மெக்கேன் எரிக்சன் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது. எனவே விளம்பர தூதராக செயல்பட்டுவந்த ஆமிர்கான் ஒப்பந்தமும் முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் உன்னதமான இந்திய திட்டத்தின் புதிய விளம்பர தூதராக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒருவேளை அமிதாப் பச்சன் மறுப்பு தெரிவித்தால் நடிகர் அக்சய்குமார், நடிகைகள் தீபிகா படுகோன்,பிரியங்கா சோப்ரா ஆகியோரில் யாராவது ஒருவர் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மோடி குஜராத் முதல்வராக பதவி வகித்த போது அம்மாநில சுற்றுலா வளர்ச்சித் துறையின் தூதராக அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications