”ஒரு மகள் 10 மகன்களுக்கு சமம்”- உலக மகள்கள் தின வாழ்த்தில் அமிதாப்பின் உருக்கமான டுவிட்!
டெல்லி: ஒரு பெண் குழந்தையான மகள் வீட்டில் இருப்பது 10 ஆண் குழந்தைகளான மகன்கள் இருப்பதற்கு சமம் என்று தெரிவித்துள்ளார் பிரபல இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்.
இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஐக்கிய நாடுகளின் சபையில் பெண் குழந்தைகள் நல அமைப்பின் தூதுவராக இருக்கிறார். இதன்மூலம் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக பல்வேறு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் உலக மகள்கள் தின வாரத்தினை ஒட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்ததுடன், "பெற்றோர்களுக்கு பெண் குழந்தைகள் இருப்பது பெருமையான விஷயம். மகள்களை நாம் மகன் போல "வாடா... போடா..." என்று கூப்பிடுகிறோம். அதே நேரம், மகன்களை மகள்கள் போல அழைப்பது இல்லை. இதுதான் மகள்களுக்கு இருக்கிற முக்கியத்துவம்.
பெற்றோருக்கு மகள்கள் பதற்றத்தை ஏற்படுத்த மாட்டார்கள். இன்றைய உலகில் ஒரு மகள் இருப்பது 10 மகன்களுக்கு சமம்" என்று தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் பிக் "பி" அமிதாப் பச்சனுக்கு ஸ்வேதா என்ற மகளும் இருக்கிறார். மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராயை மணந்துள்ளார். நவ்யா நவேலி, ஆரத்யா என 2 பேத்திகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications