ட்விட்டரில் கிங் யார் தெரியுமா... நம்ம அமிதாப்தான்!
இந்திய திரையுலகப் பிரமுகர்களில் 12 மில்லியன் ஃபாலோயர்களுடன் ட்விட்டரில் முதலிடத்தில் உள்ளார் பாலிவுட் சாதனை நடிகர் அமிதாப் பச்சன்.
வேறு யாரையும் இந்த அளவு மக்கள் பின் தொடரவில்லை என்பதால் அவர்தான் ட்விட்டரின் கிங் என வர்ணிக்கிறது டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனமான டு த நியூ.

ட்விட்டரில் உள்ள திரையுலகப் பிரமுகர்களின் புகழ் மற்றும் செல்வாக்கு, ட்விட்டரில் அவர்கள் செயல்பாடு போன்றவற்றின் அடிப்படையில் அவர்களின் ரேட்டிங்கை வெளியிட்டுள்ளது இந்த நிறுவனம்.
அதன்படி 12 மில்லியன் பின்தொடர்வோருடன் முதலிடத்தில் அமிதாப் உள்ளார்.
அவருக்கு அடுத்த இடத்தில் 10.4 மில்லியன் பின்தொடர்வோருடன் ஷாரூக்கான் உள்ளார். மூன்றாவது இடத்தில் அபிஷேக் பச்சன் உள்ளார். அவரைப் பின் தொடர்வோர் 5.4 மில்லியன். பின் தொடர்வோர் குறைவாக இருந்தாலும் பாபுலாரிட்டி அடிப்படையில் அவர் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
ஹ்ரித்திக் ரோஷன் நான்காம் இடம் பிடித்துள்ளார். 7.7 மில்லியன் பேர் அவரைப் பின் தொடர்கிறார்கள். 10.1 மில்லியன் பின் தொடர்வோரைக் கொண்ட ஆமீர் கான் 5வது இடத்திலும், 9.5 மில்லியன் பின்தொடர்வோருடன் சல்மான்கான் ஆறாவது இடத்திலும் உள்ளார்.
நடிகைகளில் ப்ரியங்கா சோப்ராவுக்கு 8 மில்லியன் பின் தொடர்வோரும், தீபிகா படுகோனுக்கு 8.57 மில்லியன் பின் தொடர்வோரும், சோனம் கபூருக்கு 5.6 மில்லியன் பின் தொடர்வோரும் உள்ளனர்.
அமிதாப் ஒரு நாளைக்கு 20 ட்வீட்டுகளை பதிவிடுகிறார். ரீட்வீட்டுகள், பதில்கள் அனைத்தும் இதில் அடங்கும். அதேபோல அவர் மகன் அபிஷேக் பச்சன் ஒரு நாளைக்கு பத்து ட்வீட்கள் பதிவு செய்கிறார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications