எங்க, காட்டுங்க பார்க்கலாம்.. தேமுதிகவிடம் மெம்பர்ஷிப் "ஆதாரம்" கேட்டு "ஷாக்" கொடுத்த அமீத் ஷா!
டெல்லி: ஏண்டா டெல்லிக்குப் போனோம் என்று புலம்பாத குறையாக இருக்கிறாராம் தேமுதிக இளைஞர் அணிச் செயலாளரும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மச்சானுமான சுதீஷ். காரணம், டெல்லியில் பாஜக தலைவர் அமீத் ஷாவைப் பார்த்தபோது அவர் கேட்ட கேள்விகளுக்கு சுதீஷால் பதில் சொல்ல முடியாமல் போய் விட்டதாம். பெரும் தர்மசங்கடத்துடன் சென்னை திரும்பியுள்ளாராம் அவர்.
சுதீஷிடம் அப்படியெல்லாம் ஏடாகூடமான கேள்விகளை அமீத் ஷா கேட்கவில்லையாம். உங்க கட்சியில் நிறைய உறுப்பினர்கள் உள்ளதாக சொல்கிறீர்களே, அதற்கு ஆதாரம் காட்ட முடியுமா என்று கேட்டு விட்டாராம் ஷா. இதற்கு சரியான பதில் அளிக்க முடியாமல் திணறிப் போய் விட்டாராம் சுதீஷ்.
இப்படி ஒரு கேள்வியை அவர் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். மேலும் யாருமே இதுவரை இப்படி ஒரு கேள்வியை தேமுதிகவிடம் கேட்டதில்லை என்பதால் தேமுதிக வட்டாரமே கூட அமீத் ஷாவின் கேள்வியால் அதிர்ச்சியடைந்துதான் போயுள்ளது.

சட்டசபைத் தேர்தலுக்கு ஆயத்தம்
மக்கள் பிரச்சினை இப்போது அரசியல் கட்சிகளுக்கு முக்கியம் இல்லை. மாறாக 2016ல் வரப் போகும் சட்டசபைத் தேர்தலுக்கு யாருடன் கூட்டணி அமைக்கலாம். எப்படியெல்லாம் போட்டியிடலாம். ஆட்சியைப் பிடிக்க முடியுமா, முடியாதா. யார் கூட சேர்ந்தால் நல்லது, யார் கூட சேர்ந்தால் அழிவு என்ற யோசனையில்தான் கிட்டத்தட்ட அத்தனை கட்சிகளுமே உள்ளன.

அதிமுக தவிர
இப்போதைக்கு இந்தத் தேர்தல் கூட்டணி தொடர்பாக மண்டையை உடைத்துக் கொள்ளாத ஒரே கட்சி அதிமுகதான். அது தவிர மற்ற கட்சிகள் அனைத்துமே எந்தக் கூட்டணியில் இணைவது, என்ன கூட்டணியை அமைப்பது என்ற குழப்பத்தில், முயற்சிகளில் தீவிரமாக உள்ளன.

சிதறிப் போன பாஜக கூட்டணி
கடந்த லோக்சபா தேர்தலின்போது பாஜக தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமைந்தது. ஆனால் அது வீணாய்ப் போய் விட்டது. தமிழகத்தில் 2 சீட்தான் அக்கூட்டணிக்குக் கிடைத்தது. அதிலும் ஒரு சீட் மட்டுமே பாஜகவுக்குக் கிடைத்தது. இன்னொரு சீட்டான தர்மபுரியில் பாமக தனது சொந்த பலத்தில் வென்றது. மற்ற அத்தனைத் தொகுதிகளையம் அதிமுக அள்ளிக் கொண்டு போனது. திமுக நிராகரிக்கப்பட்டது. தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி சிதறிப் போனது.

தனிப் பாதையில் ஒவ்வொரு கட்சியும்
பாஜக கூட்டணியில் இருந்த மதிமுக, பாமக ஆகியவை தனித்து வந்து விட்டன. தேமுதிக என்ன மாதிரியான நிலைப்பாட்டில் இருக்கிறது என்று அக்கட்சியினருக்கே உறுதியாகத் தெரியவில்லை.

ஒருவேளை அப்படி அறிவித்தால்
இருப்பினும் பாஜக கூட்டணியை இன்னும் முழுமையாக தேமுதிக கை கழுவவில்லை. மாறாக மறைமுகமாகவும், நேரடியாகவும் பாஜகவுக்கு அது சில நிபந்தனைகளைப் போட்டு வருகிறதாம். அதில் முக்கியமானது, தன்னை முதல்வர் வேட்பாளராக பாஜக அறிவிக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூற ஆரம்பித்துள்ளாராம். அப்படி அறிவித்தால் கூட்டணியில் தேமுதிக நீடிக்கும் என்றும் விஜயகாந்த் கூறி வருகிறாராம்.

டெல்லிக்குப் போன மச்சான்
இதற்காக டெல்லிக்கு சமீபத்தில் போயிருந்தார் சுதீஷ். அங்கு அமீத் ஷாவைச் சந்தித்து இதுதொடர்பாக அவர் கோரிக்கை வைத்தாராம்.

கேட்டாரே அமீத்ஷா...!
சுதீஷ் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்ட அமீத் ஷா அடுத்து சில கேள்விகளை எடுத்து வைத்தாராம். எல்லாம் சரி, ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் பாஜக அத்தனை கோரிக்கை விடுத்தும், நேரில் வந்து பார்த்தும் கூட உங்களது கட்சி எங்களது வேட்பாளரை ஆதரிக்கவில்லையே அது ஏன்... தேமுதிக பெரிய கட்சி என்கிறீர்கள். இத்தனை உறுப்பினர்கள் உள்ளனர் என்கிறீர்கள். அதற்கு உங்களிடம் ஆதாரம் உள்ளதா. உண்மையில் உங்களது கட்சியில் எத்தனை உறுப்பினர் உள்ளனர் என்பதை சரியாக சொல்லமுடியுமா என்று கேட்டாராம் அமீத் ஷா.

கப்சிப் சுதீஷ்
இதற்கு சுதீஷால் பதில் அளிக்க முடியவில்லையாம். அமைதியாக இருந்தாராம். மேலும் அமீ்த் ஷா எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லையாம். இதனால் சுதீஷ் டெல்லியிலிருந்து கிளம்பி வந்து விட்டார்.

சந்தேகம்தான்
எனவே தேமுதிக வரும் தேர்தலில் பாஜக கூட்டணியில் நீடிப்பது சந்தேகம் என்கிறார்கள். அதன் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதையும் ஊகிக்க முடியவில்லை.

புதுக் கூட்டணி அமையுமா
ஒரு வேளை தேமுதிக தலைமையில் தமிழகத்தில் புதிய கூட்டணி அமையலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இக்கூட்டணியில் கம்யூனிஸ்டுகள், ஜி.கே.வாசன் உள்ளிட்டோரை இணைக்கவும் ஒரு யோசனை தெரிவிக்கப்பட்டு வருகிறதாம். ஆனால் திமுக, அதிமுக என்ற இரு மலைகளுக்கு மத்தியில் எத்தனை கூட்டணிகள் கூடினாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதால் இது வேலைக்கு ஆகாது என்று விஜயகாந்த் தரப்பு கூறி வருகிறதாம்.

திமுகவுக்குத் திரும்ப வாய்ப்பு
எனவே தேமுதிக கடைசி நேரத்தில் திமுக பக்கம் திரும்பலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட திமுகவுக்கு திரும்பி வரலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இவை போக விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவையும் திமுக பக்கம் அணி வகுக்கும்.

காங்கிரஸும் வரலாம்
அதேபோல காங்கிரஸ் கட்சியும் திமுக பக்கம் வரக் கூடிய வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்கிறார்கள். காங்கிரஸை மீண்டும் திமுக கூட்டணியில் சேர்க்க ஒரே ஒரு காரணம் போதும்- மதச்சார்பற்ற கட்சி.

பாஜக நிலைமை பரிதாபமாகுமோ
இப்படி திமுக பக்கம் பல கட்சிகளும் போகும் வாய்ப்புள்ளதால் பழைய.. பாஜக மீண்டும் தனித்து விடப்படலாம்.
ஆனால் இது அரசியல்... கடைசி விநாடி வரை எதையுமே ஊகிக்க முடியாது.. எனவே, வழக்கம் போல பொறுத்திருந்து பார்க்கலாம்!
-
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications