மாதா அமிர்தானந்த மயி 61 வது பிறந்தநாள் 2 நாட்கள் கோலாகலம்
கொல்லம்: அமிர்தானந்த மயி தேவியின் 61 வது பிறந்தநாள் விழாவை ஒட்டி கொல்லத்தில் உள்ள அமிர்தபுரியில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2 நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு இலவச போக்குவரத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அமிர்தானந்த மயி மடம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:
மாதா என்று பல நாட்டை சேர்ந்தவர்களால் அன்பாக அழைக்கப்படும் மாதா அமிர்தானந்த மயி தேவியின் 61-வது பிறந்த நாள் விழா வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி கொல்லம் அமிர்தபுரியில் உள்ள மாதா அமிர்தானந்த மயி மடத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
கலை, கலாசாரம், கல்வி, மருத்துவம், விஞ்ஞானம், சுற்றுச்சூழல் மேம்பாடு, மனிதநேயம், மனித குல ஒற்றுமை மற்றும் உலக அமைதி போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு பல்வேறு விதமான பல்சுவை நிகழ்ச்சிகளும், பொருட்காட்சிகளும் நடைபெற உள்ளன.
இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வருகை தர உள்ள அறிஞர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்கள் குறிப்பாக கிராங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
ஏழைகள் மற்றும் வறுமையில் வாடுபவர்களுக்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2 நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு இலவச போக்குவரத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்ட சேர்ந்தவர்களும், இந்த ஏற்பாடுகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம். மேற்கண்ட தகவல் கன்னியாகுமரி மாதா அமிர்தானந்த மயி மடத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications