வெட்கமே இல்லையா?: என். சீனிவாசனை கலாய்க்கும் அமுல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலக மறுக்கும் என். சீனிவாசனை கிண்டலடித்து அமுல் நிறுவனம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமுல் நிறுவனம் பிரபலங்களை புகழ்ந்தும், கிண்டலடித்தும் பொம்மை பட விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் பிக்ஸிங் குறித்த வழக்கில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியில் இருந்து ஒதுங்குமாறு என். சீனிவாசனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Amul mocks N. Srinvasan as Sharmnivasan

ஆனால் சீனிவாசனோ தலைவர் பதவியை விட்டு விலக மாட்டேன் என்று அடம்பிடித்து வருகிறார். அவர் பதவி விலகினால் தான் ஐபிஎல் பிக்ஸிங்கில் நியாயமான விசாரணை நடத்தப்படும் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் ஐபிஎல் பெட்டிங்கில் சிக்கியவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் தான்.

இந்நிலையில் பதவி விலக மறுக்கும் சீனிவாசனை கிண்டலடித்து அமுல் நிறுவனம் பொம்மை விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் அவர் தலைவர் சீட்டை விட மாட்டேன் என்று பிடித்துக் கொண்டிருக்கிறார், அருகில் நீதிபதி வாயில் விரல் வைத்துக் கொண்டு இடத்தை காலி செய்யுங்கள் என்பது போன்று கையை நீட்டுகிறார். இந்த விளம்பரத்திற்கு வெட்கங்கெட்ட சீனிவாசன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+