Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைக்கொடுத்த இன்ஸ்டா ரீல்ஸ்.. 34 வயது பெண்ணை மணந்த 80 வயது முதியவர்..90ஸ் கிட்ஸ்களை கடுப்பாக்காதீங்க

Subscribe to Oneindia Tamil

போபால்: இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட காமெடி ரீல்ஸில் ஈர்க்கப்பட்ட 34 வயது இளம்பெண், 80 வயது முதியவரை திருமணம் செய்துள்ளார். 90ஸ் கிட்ஸ்கள் பலருக்கும் இன்னும் திருமணமாகாத நிலையில் 80 வயது முதியர் தனது ரீல்ஸ் மூலம் 34 வயது பெண்ணை காதல் வலையில் விழ வைத்து அவரை 2வது திருமணம் செய்த சம்பவம் பேசும் பொருளாகி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் மால்வா மாவட்டம் மாகாரியா கிராமத்தை சேர்ந்தவர் பாலுராம் (வயது 80). திருமணமானவர். இவருக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். மனைவி சமீபத்தில் உடல்நலக்குறைவால் இறந்தார். மனைவி இறந்த பிறகு பாலுராம் மிகவும் மனஅழுத்தத்துக்கு ஆளானார்.

An 80-year-old man married a 34 year old woman after they fell in love on Instagram

குறிப்பாக வயது முதிர்வு மற்றும் கடன் உள்ளிட்டவை தான் பாலுராமின் மனஅழுத்தத்துக்கு முக்கிய காரணமாக இருந்தது. பாலுராம் மனஅழுத்தத்தில் இருப்பதை அறிந்து நண்பரான டீக்கடை நடத்தி வரும் விஷ்ணு குஜ்ஜார் அவரை அழைத்து இருவரும் ஜோக் தொடர்பான வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக பதிவிட்டனர்.

இந்நிலையில் தான் விஷ்ணு குஜ்ஜார் மற்றும் பாலுராம் ஆகியோரின் ரீல்ஸ் அனைவரையும் ஈர்த்தது. குறுகிய காலத்தில் அவர்களுக்கு அதிகமான பாலோவர்ஸ் கிடைத்தது. அதுமட்டுமின்றி இருவரும் அந்த பகுதியில் மிகவும் பிரபலமாக தொடங்கினர். 80 வயது ஆனாலும் கூட வயதை பொருட்படுத்தாமல் தனது வேடிக்கையான ரீல்ஸ் மூலம் அவர் மக்களை மகிழ்வித்து வருகிறார். இதனால் அவரை ஏராளமானவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

பாலுராமை மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்த 34 வயது பெண் ஷீலாவும் பின்தொடர்ந்து வந்தார். பாலுராமின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸால் ஷீலா ஈர்க்கப்பட்டார். மேலும் அவர்கள் 2 பேரும் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்து தினமும் பேச தொடங்கினர். பாலுராமுக்கு ஆன்ட்ராய்டு போனில் ரீல்ஸ் போடுவதை தவிர பிற அம்சங்களை பயன்படுத்த தெரியாது. இதனால் ஷீலாவின் மெசேஜ்களுக்கு பாலுராம் கூற விஷ்ணு குஜ்ஜார் டைப் செய்து அனுப்பினார். இந்த ‛சாட்' என்பது பாலு ராமின் மீது ஷீலாவுக்கு அதிக ஈர்ப்பை ஏற்படுத்தியது.

மேலும் இருவருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நெருக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில் தான் ஷீலா, பாலு ராமை திருமணம் செய்ய முடிவு செய்தார். இதனை பாலுராமிடம் தெரிவித்தார். அவரும் ஓகே சொன்ன நிலையில் ஷீலா தனத வீட்டை விட்டு வெளியேறி பாலுராமின் வீட்டுக்கு சென்றார். அதன்பிறகு அவர்கள் இருவரும் கடந்த 1ம்தேதி நீதிமன்ற வளாகத்தில் உள்ள கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணம் தொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. பலரும் அவர்களை வாழ்த்தி வருகின்றனர். இருப்பினும் ஒரு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசத்தை சுட்டிக்காட்டி சிலர் பொருந்தாத திருமணம் எனக்கூறி வருகின்றனர். 90ஸ் கிட்ஸ் பலருக்கும் இன்னும் திருமணம் ஆகாத நிலையில் 80 வயது பாலுராம் - 34 வயது ஷீலாவின் காதல் திருமணம் டிரெண்டாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+