மனைவியை "நிர்வாணமாக்கி".. மார்பை கடித்து..! அதுவும் நண்பர்கள் முன்னாலேயே.. ராணுவ வீரர் செய்த கொடூரம்

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ராணுவ வீரர் ஒருவர் தனது மனைவிக்குச் செய்த கொடூரம் அதிர வைப்பதாக உள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதுவும் பாலியல் ரீதியான குற்றங்கள் சமீப காலங்களில் பல மடங்கு அதிகரித்து உள்ளது.

அதேபோல குடும்ப வன்முறையும் பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. பெண்களைக் காக்க அரசும் பல நடவடிக்கை எடுத்து வருகிறது.

 குஜராத் ராணுவ வீரர்

குஜராத் ராணுவ வீரர்

இந்தச் சூழலில் ராணுவ வீரர் ஒருவரே தனது மனைவியிடம் மிகக் கொடூரமான முறையில் நடந்து கொண்டு உள்ளார். இந்தத் தகவல் இப்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீரில் பணியாற்றி வரும் குஜராத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்து உள்ளார். அப்போது அவருக்குத் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அவர் வேறு ஒருவருடன் உறவில் இருப்பதாக இவர் சந்தேகப்பட்டு உள்ளார்.

 நிர்வாணமாக்கித் தாக்குதல்

நிர்வாணமாக்கித் தாக்குதல்

இதன் காரணமாக நண்பர்கள் முன்னிலையிலேயே மனைவியை நிர்வாணமாக்கிய அந்த கொடூர கணவர், அவரை கொடூரமாகவும் தாக்கி உள்ளார். மேலும், அவர் ஆயுதத்தை வைத்தும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட அந்த பெண் வாட்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் ராணுவ வீரர் மீதும் அவரது நண்பர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 புகார்

புகார்

பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் "எனது கணவர் திலீப் தாகூர் அவரது நண்பர் பின்டூவின் காரில் என்னை விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றார்.. அவர்களுடன் அவரது நண்பர் கல்பேஷ் என்பவரும் அடையாளம் தெரியாத மற்றொரு நபர் ஒருவரும் இருந்தனர். அப்போது திடீரென ஆவேசமடைந்த எனது கணவர் மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் என்னைத் திட்டினார்.

 மார்பை கடித்து

மார்பை கடித்து

நண்பர்கள் முன்னிலையிலேயே என் கணவர் ஆடைகளைக் கழற்றச் சொன்னார். நான் மறுத்த போது, வலுக்கட்டாயமாக எனது ஆடையைக் கழற்றிய எனது கணவர் உதட்டையும் கடித்தார். பிறகு என் மார்பிலும் காதிலும் கடித்தார். இதனால் எனக்கு ரத்தம் வர ஆரம்பித்துவிட்டது. இதையடுத்து அவர்கள் முதலில் என்னை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

 பரபர புகார்

பரபர புகார்

அங்கு இருந்த மருத்துவர், இது கிரிமினல் கேஸ் என்பதால் எனக்குச் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டார். அதன் பின்னர் அரசு மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்றனர். உதட்டில் எனக்கு ஏற்பட்ட காயத்திற்கு ஆப்ரேஷன் செய்து சிகிச்சை அளித்தனர். அவரது நண்பர்கள் தான் நான் திருமணத்திற்குத் தாண்டிய உறவை வைத்து உள்ளதாகப் பொய்யான தகவலை அவரிடம் கூறி உள்ளனர். இதன் காரணமாகவே அவர் இப்படி நடந்து கொண்டார்" என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+