ஹைதராபாத் அருகே நொறுங்கி விழுந்த விமானப்படை விமானம்.. குதித்து தப்பிய பெண் பைலட்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: விமானப்படைக்கு சொந்தமான கிரண் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் பெண் விமானி காயங்களுடன் தப்பினார்.

ஹைதராபாத், ஹகிம்பேட் பகுதியில் விமானப்படை மையம் உள்ளது. இங்கு விமானிகள் பயிற்சி எடுப்பது வழக்கம். இன்று பிற்பகல் 2 மணியளவில் 'கிரண்' வகை விமானத்தை பெண் விமானி ரஷி இயக்கி பயிற்சி மேற்கொண்டார்.

An Indian Air Force trainer aircraft crashed near Hyderabad

தரையிறக்கும் நேரத்தில், எதிர்பாராத விதமாக விமானத்தில் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. உடனடியாக ரஷி, கீழே குதித்து தப்பினார். விமானம் நொறுங்கி விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

அந்த பக்கமாக சென்ற மக்கள் சிலரிடம் செல்போனை வாங்கி சம்பவம் பற்றி உயர் அதிகாரிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார். அது வீடியோவாக எடுக்கப்பட்டு சோஷியல் மீடியாவில் சுற்றி வருகிறது. பெண் பைலைட்டை ஆம்புலன்சில் ஏற்றி மக்கள் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

இதனிடையே கிரண் வகை விமானம் விபத்துக்குள்ளாவது தொடர் கதையாவதாக சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த மாதமும் இதே வகை விமானம் விபத்துக்குள்ளானது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+