108 கிலோ எடையை குறைத்து ஆனந்த் அம்பானி ஸ்லிம் ஆனது எப்படி?

Subscribe to Oneindia Tamil

மும்பை: ரிலையன்ஸ் நிறுவன தலைவரும், அதன் மேலாண்மை இயக்குனருமான முகேஷ் அம்பானியின் மூத்த மகன் அனந்த் அம்பானி கடந்த 18 மாதங்களில் தனது உடல் எடையில் 108 கிலோ எடையை குறைத்து புதுப்பொலிவுடன் காணப்படுவது அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

நாள்பட்ட ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட ஆனந்த் அம்பானி அந்நோய்க்காக எடுத்துக்கொண்ட மருத்துவத்தின் காரணமாக உடல் எடை அதிகப்படியாக அதிகரித்தது.

Anant Ambani sheds 108 kilos, stuns family and friends

இந்நிலையில் தனது 21வது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு முன்னதாக தனது உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என எண்ணி அதற்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை குறைத்துள்ளார்.

இதற்காக அவர் பல கடும் முயற்சி மேற்கொண்டார். தினமும் 21 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்ட அவர், அத்துடன் சேர்த்து யோகா, உடற்பயிற்சிகளை தனது அன்றாடை வாழ்க்கையில் கடைபிடித்துள்ளார்.

மேலும் தனது உணவு பழக்கவழக்கங்களிலும் சில மாற்றத்தை கொண்டுவந்த அவர் கொழுப்புசத்து இல்லாத உணவு வகைகளையே உட்கொண்டுள்ளார்.

இந்த உடல் எடை குறைப்பு முற்றிலும் இயற்கை முறையில் எட்டப்பட்டது எனவும் இதனால் அவருக்கு எந்தவித பக்கவிளைவும் ஏற்படாது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது மகனின் முயற்சியால் நீட்டா அம்பானி மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

கடந்த ஆண்டுகளில் இவர் உருவத்தை வைத்தும் மும்பை இண்டியன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ஆனந்த் அம்பானி உட்கார்ந்து இருப்பதை கொண்டும் மீம்ஸ்களை உருவாக்கி தெறிக்க விட்டனர் நெட்டிசன்கள்.

இப்போது 108 கிலோ குறைந்து ஸ்லிம் ப்யூட்டியாக வலம் வரும் அவரது தற்போதைய ஃபோட்டோக்கள்தான் சமீபத்தில் வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+