வாவ்.. அனைவரும் சபாஷ் போட்டு ஆனந்த் அம்பானியைப் பாராட்டுங்கள்!
மும்பை: ஆனந்த் அம்பானி... பெயர் பலருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இவரது முகமும், உருவமும் பலரது மனதில் பதிந்து போன ஒன்று. ஆம், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் பருமனான உடல்வாகு கொண்ட மூத்த மகன் தான் இவர்.
ஐபிஎல் போட்டிகளில் இவர் உட்கார்ந்திருப்பதை வைத்து கேலி செய்து மீம்ஸ் எல்லாம் கூட போட்டுக் கிண்டலடித்தனர் பலர். ஆனால் இன்று பலரும் வியக்கும் வண்ணம் தனது உடல் எடையில் 70 கிலோவைக் குறைத்து ஸ்லிம்மாகி கலக்கலாக காணப்படுகிறார் ஆனந்த் அம்பானி.
இவரா அவரா என்று ஆச்சரியப்படும் வகையில் அடியோடு மாறி நிற்கிறார் ஆனந்த் அம்பானி. அவரது உடல் மெலிந்த லேட்டஸ்ட் படம் இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
ஹைப்போதைராய்டு பிரச்சினை உடையவர் ஆனந்த் அம்பானி. இதனால்தான் வரது உடல் எடை மிக மிக அதிகமாக இருந்தது. இந்த நிலையில் கடுமையான உடற் பயிற்சி செய்து உடல் எடையை குறைததுள்ளாராம் ஆனந்த் அம்பானி. கிட்டத்தட்ட 70 கிலோ வரை குறைத்துள்ளதாக சொல்கிறார்கள்.
அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர் ஒருவரின்நேரடி கண்காணிப்பில் தனது உடல் எடையைக் குறைக்கும் வேலையில் தீவிரமாக இறங்கினாராம் ஆனந்த். அதன் விளைவாக இன்று உடல் எடை அடியோடு குறைந்து ஸ்லிம்மாகி விட்டார்.
உடல் எடையைக் கடுமையாக போராடிக் குறைத்த ஆனந்த்தைப் பாராட்டுவோம்!












Click it and Unblock the Notifications