தமிழக அரசியல் சாக்கடையாகிவிட்டது - அன்புமணி சுளீர்: வீடியோ
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தமிழக அரசை பற்றி பேச இது இடம் இல்லை-அன்புமணி ராமதாஸ் பதில்-வீடியோ
திருப்பதி: தமிழக அரசியல் சாக்கடையாகிவிட்டது என பாமக இளைஞரணி தலைவர்
அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
திருமண நாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி சென்றார். அங்கு அவர் தரிசனம் முடித்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசினார்.

செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அன்புமணி, தமிழக அரசியல் சாக்கடையாகிவிட்டது. அது குறித்து இந்த புனித பூமியில் பேச வேண்டாம் என கூறி அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.
நீட் தேர்வு விவகாரம், காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல விஷயங்களில் கருத்து கூறி வந்த அன்புமணி ராமதாஸ் திருப்பதியில் செய்தியாளர்களுக்கு பதில் அளிக்காமல் சென்றது வியப்புக்குரியதாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications