Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயங்கரமாக சரிந்த வாக்குப்பதிவு.. 15 ஆண்டுகளில் இதுதான் மோசம்.. அந்தமானில் ஆர்வம் காட்டாத மக்கள்! ஏன்

Subscribe to Oneindia Tamil

அந்தமான்: லோக்சபா தேர்தலில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அந்தமானில் வாக்கு சதவிகிதம் மிகக் கடுமையாகச் சரிந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதை அங்குள்ள அரசியல் பிரமுகர்கள் பகிர்ந்துள்ளனர்.

நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக இந்த முறை லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட மொத்தம் 102 தொகுதிகளுக்கு நேற்று லோக்சபா தேர்தல் நடைபெற்றது.

Andaman records lowest turnout in 15 years in lok Sabha election

லோக்சபா தேர்தல்: அதன்படி வங்கக்கடலில் அமைந்துள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் லோக்சபா தேர்தல் நேற்று நடைபெற்றது. இருப்பினும், அங்கே கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்தபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்தத் தேர்தலில் அந்தமானில் 63.99% வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. இது 20 ஆண்டுகளுக்கு முன்பு 2004ல் பதிவான 63.66% வாக்குகளை விட இது கொஞ்சம் மட்டுமே அதிகமாகும்.

அங்குக் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளே கடந்த 4 தேர்தல்களில் மாறி மாறி வென்றுள்ளன. இந்த இரு கட்சிகளுக்கு மட்டும் மாறி மாறி வாக்களித்து மக்கள் சோர்ந்து போய் விட்டார்கள் என்றும் இதுவே வாக்குப்பதிவு குறையக் காரணம் என்று தெலுங்கு தேசம் கட்சியின் அந்தமான் பிரிவின் தலைவர் மாணிக்யா ராவ் யாதவ் கூறியுள்ளார். இது மட்டுமின்றி கடந்த காலங்களை விட இந்த முறை வெப்பமும் மிகக் கடுமையாக இருந்ததாகவும் இதுவும் அங்கு வாக்குப்பதிவு குறையக் காரணம் என்று அவர் தெரிவித்தார்.

15 ஆண்டுகளில் இல்லாத சரிவு: அந்தமானில் கடந்த 15 ஆண்டுகளில் பதிவான குறைந்தபட்ச வாக்குப்பதிவு இதுவாகும். கடந்த 2004இல் 66.66% வாக்குகள் பதிவானது. கிட்டதட்ட அந்தளவுக்கு இந்த முறை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. 2009இல் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட போது 64.2% வாக்குகள் பதிவாகி உள்ளது.

2014இல் மோடி முதல்முறையாகப் பிரதமர் ஆன போது அங்கே அதிகபட்சமாக 70% வாக்குகள் பதிவானது. கடந்த 2019இல் அங்கு 65% வாக்குகள் மட்டுமே பதிவான நிலையில், இந்த முறை அது மேலும் குறைந்து 63.99%ஆகப் பதிவாகி இருக்கிறது.

எங்கு மோசம்: திக்லிபூர், மாயாபந்தர் மற்றும் ரங்கட் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வடக்கு மற்றும் மத்திய அந்தமானில் அதிகபட்சமாக 72.80% வாக்குகள் பதிவாகியுள்ளன. நிக்கோபார் பகுதியில் 72.77% வாக்குகள் பதிவான நிலையில், தெற்கு அந்தமானில் 59.59% வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. தலைநகர் போர்ட் பிளேரில் இன்னும் மோசம்.. அங்கு 54.5% வாக்குகள் மட்டுமே பதிவாகின.

கடந்த தேர்தல்கள்: அந்தமான் லோக்சபா தொகுதியைப் பொறுத்தவரை அங்கே காங்கிரஸ் கட்சியே மிகப் பெரியளவில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. அங்கு 1967 முதல் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், 1999 வரை காங்கிரஸ் எம்பியே தேர்வானார். 1999 முதல்முறையாக பாஜகவில் இருந்து பிஷ்ணு பாத ரே எம்பி ஆனார். 2004இல் மீண்டும் அங்குக் காங்கிரஸ் வென்ற நிலையில், 2009, 2014 ஆண்டுகளில் மீண்டும் பாஜகவின் பிஷ்ணு பாத ரே அங்கே வென்றார்.

கடந்த 2019இல் நடந்த தேர்தலில் காங்கிரஸின் குல்தீப் ராய் சர்மா மற்றும் பாஜகவின் விஷால் இடையே போட்டி மிகக் கடுமையாக இருந்தது. இருவருமே சுமார் 45% வாக்குகளைப் பெற்றனர். இருப்பினும், காங்கிரஸின் குல்தீப் ராய் வெறும் 1407 வாக்குகள் கூடுதல் பெற்று அங்கு வென்றார். அந்தத் தேர்தலில் அங்கே நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் 1412 என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+