சிறப்பு அந்தஸ்து- ஆந்திராவில் பந்த்! வெறிச்சோடிய வீதிகள்- கடைகள் அடைப்பு- தமிழக பேருந்துகள் ரத்து!!
விஜயவாடா: ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில எதிர்க்கட்சிகள் நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதால் ஆந்திர மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மந்தமடைந்திருக்கிறது. இதனால் அம்மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது அனைத்து கட்சிகளின் கோரிக்கை.
ஆனால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது. இருப்பினும் மாநில வளர்ச்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்தார். இது ஆந்திராவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா கொந்தளிப்பு
தற்போது மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக ஆந்திராவில் நேற்று போராட்டம் வெடித்தது. மறியல்-ஆர்ப்பாட்டங்களில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டனர்.

முழு அடைப்பு
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மற்றும் பொது மக்களிடம் ஆதரவு கேட்டார்.

வீட்டுக் காவலில் தலைவர்கள்..
எதிர்க்கட்சிகளின் பந்த் போராட்டம் அறிவிப்பால் முக்கிய தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். காங்கிரஸ், கம்யூனிஸ்டு தலைவர்கள் வீடுகளுக்கு சென்று நீங்கள் வெளியே சென்றால் கைது செய்வோம் என்று கதவில் நோட்டீஸ் ஒட்டி அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கடைகள் அடைப்பு
ஆந்திராவின் 13 மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. வியாபாரிகள் தானாக முன் வந்து கடைகளை அடைத்தனர்.

வெறிச்சோடிய கடப்பா
கடப்பா மாவட்டத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

பேருந்துகள் குறைவு
பேருந்துகளை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க ஆந்திர அரசு உத்தரவிட்டது. ஆனாலும் 75% பேருந்துகள் ஓடவில்லை. பல இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்றைய போராட்டத்தால் ஆந்திரா ஸ்தம்பித்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications