சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் 'பந்த்' .. இயல்பு வாழ்க்கை முடங்கியது! தமிழக பஸ்கள் நிறுத்தம்!!
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முழு அடைப்புப் போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிட வலியுறுத்தி கடந்த 11-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்தது. இதற்கு அனைத்து எதிர் கட்சியினரும், பல்வேறு சங்கங்களும், அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து இதில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர், காங்கிரஸ் உட்பட பல்வேறு தரப்பினர் ஆதரவு அளித்துள்ளனர்.
இந்த முழுஅடைப்பையொட்டி ஆந்திராவில் அரசு, தனியார் பஸ்கள் இயங்கவில்லை. ஆட்டோக்கள் ஓடாது. ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை.
பெட்ரோல் பங்குகள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. பால், மருந்து, காய்கறி, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மட்டும் விநியோகம் செய்யப்படுகிறது.
இதனிடையே இந்த முழு அடைப்பால் தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் பெரும்பாலும் இயக்கப்படவில்லை. தமிழக அரசுப் பேருந்துகள் ஆந்திரா எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இன்றைய முழு அடைப்புப் போராட்டத்தால் ஆந்திராவில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications