சீமாந்திரா போராட்டம்: அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை முன் கடனாக வழங்கும் ஆந்திரா வங்கி

கடந்த 3ம் தேதி, ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா பகுதிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியில் அரசியல் கட்சிகளும் அரசு ஊழியர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊழியர்களின் போராட்டத்தினால், பொதுமக்கள் மட்டுமின்றி சம்பந்தப்பட்டவர்களின் குடும்பமும் பாதிக்கப் பட்டு வருகிறது. எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு "சூப்பர் சேலரி அக்கவுண்ட்" என்ற அடிப்படையில் கடன் வழங்க ஆந்திர அரசுக்கு சொந்தமான ஆந்திர வங்கி முன்வந்தது.
இதனைத் தொடர்ந்து தங்களது வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஒரு மாதம் சம்பளத்தை முன் கடனாக வழங்கி வருகிறது ஆந்திரா வங்கி. முன்கடனாக வழங்கப் படுகின்ற இத்தொகையானது பின்னர் அவர்களது சம்பளத்திலிருந்து இரண்டு மாத தவணையாக பிடித்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
13.5 சதவிகிதம் வட்டியுடன் தரப்படுகின்ற இந்த கடன் திட்டத்திற்கு ஊழியர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications