"பொண்ணுக்கு கல்யாணம்.." ரூ.2000 நோட்டுகளை அள்ளி வீசிய பெண் வீட்டார்.! கடைசியில் செம ட்விஸ்ட்! அடடே
ஆந்திராவில் மகளின் திருமணத்திற்காக அச்சிடப்பட்ட வித்தியாசமான அழைப்பிதழ் படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் தனது மகளின் திருமணத்திற்காக மிகவும் வித்தியாசமான முறையில் அழைப்பிதழ்களை அச்சிட்டு இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஒருவர்.. இது தொடர்பான படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்திய கலாச்சாரத்தில் திருமணத்திற்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. இதனால் ஊரே வியக்கம் வகையில் திருமணம் செய்ய வேண்டும் என்பதே இங்குப் பலரது விருப்பம்.
இதற்காக நமது ஊரில் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு மிகப் பெரியளவில் திருமணத்தைச் செய்கிறார்கள். பல கோடி செலவில் ஊரையே வியப்பில் ஆழ்த்தும் வகையில் திருமணம் செய்வது ஒரு வகை.

திருமணம்
அதேநேரம் இன்னும் சிலர் தங்கள் திருமணத்தில் வினோதத்தை புகுத்துவார்கள்.. இதன் மூலம் குறைந்த செலவில் தங்கள் திருமணம் குறித்து பலரும் பேசும்படி செய்துவிடுவார்கள். சிலரோ அதையும் தாண்டி திருமண அழைப்பிதழில் இருந்து தங்கள் கிரியேட்டிவிட்டியை புகுத்தி விடுவார்கள். அப்படியொரு சம்பவம் தான் நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் நடந்துள்ளது இதைக் கண்டு பலரும் வாயைப் பிளந்துவிட்டனர் என்றே சொல்லலாம்.

அழைப்பிதழ்
நமது நாட்டில் பலரது வாழ்க்கையில் திருமணம் என்பது ஒரு முறை மட்டுமே நடக்கும் நிகழ்வு. திருமணத்தில் நம்மைச் சுற்றி உள்ள நண்பர்கள், உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். இதனிடையே ஆந்திராவில் ஒருவர் தனது மகளின் திருமணத்திற்கு அடித்துள்ள திருமண அழைப்பிதழ் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்த படங்களும் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

ஆந்திரா
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். அப்பகுதியில் வியாபாரம் செய்து வரும் இவருக்கு இரண்டு பெண்கள். அவர்களில் முதல் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட நிலையில், இளைய மகளுக்குச் சமீபத்தில் தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனது உறவினர்களையும் நண்பர்களையும் நேரில் சென்று திருமணத்திற்கு வரும்படி பத்திரிக்கை வைக்கச் சென்றுள்ளார்.

2000 ரூபாய் நோட்டு
ஆனால், பத்திரிக்கைக்குப் பதிலாக அனைவருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து திருமணத்திற்கு அழைக்கவே உறவினர்கள் குழம்பிவிட்டனர். இன்னும் சிலர் நீ தர 2000 ரூபாய் கூட இல்லாமயா நாங்கள் இருக்கோம் என்றும் கொந்தளித்துள்ளனர். ஆனால், இதில் தான் இருக்கிறது ட்விஸ்ட்.. அதாவது வெங்கடேஷ் கொடுத்தது 2000 ரூபாய் நோட்டு இல்லை. மாறாக 2000 ரூபாய் நோட்டைப் போலவே இருக்கும் அழைப்பிதழ் ஆகும்.

திருமண அழைப்பிதழ்
அந்த 2000 ரூபாய் நோட்டு அழைப்பிதழில் முன் பகுதியில் எப்போது நோட்டின் சீரியல் நம்பர் இருக்கும் இடத்தில் திருமண தேதி இடம் பெற்றுள்ளது. அதேபோல 2000 ரூபாய் என்று இருக்கும் இடத்திலும் திருமண தேதியே இருக்கிறது. மேலே, மணமகன்- மனமகளின் பெயர் இடம் பெற்றுள்ளது. நோட்டின் பின்பகுதியில் இதர தகவல்கள் இடம் பெற்றுள்ளது. திருணம் எங்கு நடைபெறுகிறது. நிகழ்ச்சி நிரல் என்ன என்று அனைத்து தகவல்களும் பின்னால் உள்ளது.

குழம்பிய உறவினர்கள்
இந்த வித்தியாசமான அழைப்பிதழைப் பார்த்தவுடன் உறவினர்களே கன்பூஸ் ஆகிவிடுகிறார்கள். இது தொடர்பான படங்கள் தான் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.. வெங்கடேஷ் ஏற்கனவே தனது மூத்த மகளுக்குத் திருமணம் செய்த போது, அதன் திருமண அழைப்பிதழை ஏடிஎம் கார்டு வடிவில் ஏற்பாடு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போதும் கூட உறவினர்கள் குழம்பியே போனார்களாம்.












Click it and Unblock the Notifications