'விஷ்ணு' விவகாரம்: டோணிக்கு எதிரான ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் வாபஸ்!!
அனந்தபூர்: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் டோணியை விஷ்ணுவாக சித்தரிக்கப்பட்ட விவகாரத்தில் பிறப்பிக்கப்பட்ட ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டை ஆந்திராவின் அனந்தபூர் நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது.
இந்து மதக் கடவுளான விஷ்ணுவின் வேடத்தில் டோணி இருப்பது போன்ற அட்டைப்படம், பிசினஸ் டுடே வார இதழில் 2013-ஆம் ஆண்டு வெளியானது.

இது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி ஆந்திராவின் அனந்தபூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் ஷியாம் சுந்தர் இவ்வழக்கைத் தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கில் டோணிக்கு அனந்தபூர் நீதிமன்றம், ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டை அண்மையில் பிறப்பித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பான விசாரணை அனந்தபூர் நீதிமன்றத்தில் நீதிபதி கீதவாணி முன்னிலையில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது. அப்போது டோணியின் சாரில் ஆஜரான வழக்கறிஞர்கள், டோணிக்கு எதிராக அனுப்பப்பட்ட வாரண்ட் இன்னும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.
டோணிக்கு ஆதரவாக தாமாக முன்வந்து ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் விஷ்ணுவர்தன் ரெட்டி, இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவில் டோணி தற்போது விளையாடி வருகிறார் என்றார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, டோணிக்கு எதிரான ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications