செம்மரக் கடத்தல் தொடர்பாக தமிழ் நடிகரைக் கைது செய்துள்ளோம்... ஆந்திர டிஜிபி
ஹைதராபாத்: செம்மரக் கடத்தல் தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் சி. சரவணன் என்பவரைக் கைது செய்திருப்பதாக இன்று ஆந்திர மாநில காவல்துறை முறைப்படி அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பி. ராமுடு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
செம்மரக் கட்டைகள் கடத்தியதாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் ஒரு படத்தில் நடித்துள்ளதோடு, தனது பினாமிகள் மூலமாகப் பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களைத் தயாரிக்க நிதி உதவி செய்துள்ளார்.

மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு நடிகைகள் பலருடன் இவருக்கு தொடர்பு உள்ளது. அவர்களுக்கு தனது சொந்த செலவில் ஆடம்பர பங்களாக்களையும், விலை உயர்ந்த கார்களையும் பரிசளித்து உள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சரவணனின் வங்கிக் கணக்கு மூலமாக யாருக்கெல்லாம் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். இதில் பல முக்கிய புள்ளிகள், சினிமா பிரபலங்கள் சிக்குவார்கள் என்று தெரிகிறது.
செம்மர கட்டை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களில் பலர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான். அவர்களில் பலர் சென்னையை மையமாக வைத்து தொழில் செய்து வந்துள்ளார்கள். சரவணனின் சகோதரர் லெட்சுமணன் என்பவரும் ஒரு படத்தில் தயாரிப்பாளராக இருந்துள்ளார். அவரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது என்றார் அவர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications