ஆந்திராவில் ஆளுநர் மாளிகையில் 4 பேருக்கு கொரோனா உறுதி.. ஆளுநருக்கும் விரைவில் பரிசோதனை
விஜயவாடா: ஆந்திர ஆளுநர் மாளிகையில் ஒரு தலைமை பாதுகாப்பு அதிகாரி உள்பட 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளத. இதையடுத்து ஆளுநர் விஸ்வபூசன் ஹரிச்ந்திரன் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆந்திராவின் விஜயவாடாவில் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் அமைந்துள்ளது. இங்கு ஆளுநர் விஸ்வபூசன் ஹரிச்சந்திரன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆளுநருக்கு பாதுகாப்புக்கு இருக்கும் தலைமை பாதுகாப்பு அதிகாரி, ஒரு செவிலியர், துப்புரவு பணியாளர் மற்றும் வீட்டு வேலை உதவியாளர் உள்பட 4 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ஆளுநர் விஸ்வபூசன் ஹரிச்சந்திரன் விரைவில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் விஜயவாடாவில் உள்ள ராஜ் பவன் வளாகத்தில் கிருமி நாசினி ட்ரோன் மூலம் சனிக்கிழமை அன்று தெளிக்கப்பட்டது.
Recommended Video
இதற்கிடையில் ஒய்.எஸ்.ஆர். கட்சியியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சஞ்சீவ் குமார். அவரது தந்தை, சகோதரர் மற்றும் அவர்களது நான்கு குடும்ப உறுப்பினர்கள் உள்பட மொத்தம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் ஆறு பேரும் இப்போது கர்னூல் அரசு பொது மருத்துவமனையில் தொற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வருகிறார்கள். கர்னூலைச் சேர்ந்த எம்.பி., டாக்டர் சஞ்சீவ் குமார் சிறுநீரக மருத்துவர் மற்றும் அவரது மனைவியுடன் மருத்துவராகவும் உள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications