ஆந்திராவில் இனி 10 மணி நேரம் வேலை.. தொழிலாளர்களுக்கு சந்திரபாபு ஷாக்.. வெடிக்கும் போராட்டம்
அமராவதி: ஆந்திராவில் தொழிலாளர்களின் 9 மணி நேரம் வேலை நேரத்தை, 10 மணி நேரமாக உயர்த்தி அந்த மாநில அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு நிலவுகிறது.
ஆந்திரா மாநிலத்தில் தெலுங்கு தேசம், பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு திருப்பதி லட்டு கலப்படம் விவகாரத்துக்கு இணையாக மற்றொரு விவகாரம் வெடித்துக் கொண்டிருக்கிறது. அங்கு தற்போது ஒரு நாளுக்கு 9 மணி நேரம் பணி என்ற விதி அமலில் உள்ளது. இந்நிலையில் அதை 10 மணி நேரமாக உயர்த்தியுள்ளது அம்மாநில அரசு.

ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிந்த பிறகு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக அந்த மாநில அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தான் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகளும், தொழிற்சங்கங்களும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன
தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் 9 மணி நேரம் பணியில் இருந்து 10 மணி நேரமாக அதிகரித்து சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து ஆந்திரா தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பார்த்தசாரதி, "முதலீட்டாளர்கள், பணியாளர்கள் இருவரும் பயனடையும் வகையில் இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பிரிவு 54-ன் படி 9 மணி நேரம் பணி, 5 மணி நேரத்திற்கு ஒரு மணி நேரம் என்று இருந்தது. பிரிவு 55-ன்படி 10 மணி நேரம் பணி, 6 மணி நேரத்திற்கு ஒரு மணி நேரம் ஓய்வு என்று கொண்டு வரப்பட்டுள்ளது. ஓவர் டைம் என்பது ஒவ்வொரு காலாண்டுக்கும் 75 மணி நேரமாக இருந்தது. புதிய விதிகள்படி அது 144 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பல நிறுவனங்கள் நம் மாநிலத்தில் முதலீடு செய்வார்கள்.
பெண்கள் நைட் ஷிப்ட்களில் பணியாற்றுவதை ஊக்குவிக்கும் வகையிலும் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவர்களுக்கு போக்குவரத்து, பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும். இதன் மூலம் சமூக பாலின பேதங்கள் கலையப்பட்டு பெண்களின் முன்னேற்றத்துக்கும் உதவும். அதிகம் உழைத்தால், அதிக வருமானம் கிடைக்கும்.
இது சமூக பொருளாதாரத்தை உயர்த்தும் என்று நம்புகிறோம். உலகமயமாக்கல் எல்லா பகுதிகளிலும் நடக்கிறது. உலகளவில் கடைபிடிக்கும் விதிகள் அடிப்படையில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமைச்சரவை கூடி, தொழிலாளர் சட்டத்தை நன்கு ஆராய்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. என்று கூறியுள்ளார்.
இதற்கு எதிராக தீவிர போராட்டம் நடத்தி வரும் தொழிற்சங்கங்கள், பரபரப்பான வாழ்க்கை முறையில் பணிச்சுமை தவிர்க்க முடியாத பிரச்னையாக மாறி வருகிறது. கார்ப்பரேட் கலசாரத்தில் பணி நீக்கம், அதிக பணி நேரம் என்று தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும்." என்று கூறியுள்ளனர்.
சிபிஐ கட்சி மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணா, "தேசிய ஜனநாயக கூட்டணி தொழிலாளர் விரோத சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 11 வருடங்களாக பிரதமர் நரேந்திர மோடி தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பாக தேசியளவில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது." என்று கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications