ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 43 தமிழர்கள் கைது.. போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு
திருப்பதி : ஆந்திர வனப்பகுதியில் செம்மரக் கட்டைகளை வெட்டிக் கடத்தியதாக 43 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சேலம், தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியதாக 20 தமிழர்களை அம்மாநில போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தை நியாயப்படுத்தும் வகையில், ஆந்திர போலீசார் அவ்வப்போது செம்மரம் வெட்டி கடத்தியதாக பலரை கைதுசெய்து அவர்களை தமிழர்கள் என்று அடையாளப்படுத்தி வருகிறது.
இதில் அப்பாவித் தமிழர்களும் சிக்க வைக்கப்படுவதாகவும் புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் செம்மரம் வெட்டி கடத்தியதாக ஆந்திர போலீசார் 43 தமிழர்களை கைது செய்துள்ளனர்.
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் வந்த டெம்போ வாகனம் ஒன்றை வழிமறித்து ஆந்திர போலீசார் சோதனை செய்தபோது, அதில் இருந்தவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு ஆந்திர போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த கும்பலில் இருந்து சேலத்தைச் சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். மற்றவர்கள் காவலர்களிடம் இருந்து தப்பி ஓடிவிட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. அந்த கும்பலிடம் இருந்து 22 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மேலும் 42 தமிழர்கள் கைது செய்யப்பட்டதாக ஆந்திர வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications