இணைகிறது கிருஷ்ணா-கோதாவரி... ஆந்திராவின் 60 ஆண்டு கனவுத் திட்டம் நனவாகிறது!
ஹைதராபாத்: ஆந்திராவில் ஏற்படும் கடும் வறட்சியைப் போக்கும் வகையில் கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகள் வரும் 15ம் தேதி முறைப்படி இணைக்கப் படுகின்றன.
ஆந்திராவின் 60 ஆண்டுகால கனவுத் திட்டம் கிருஷ்ணா - கோதாவரி நதிகளை இணைப்பது. கடந்த 1950ம் ஆண்டு கே.எல்.ராவ் ஆந்திர வேளாண் துறை அமைச்சராக பதவி வகித்த போதே இது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப் பட்டது. பின்னர் மீண்டும் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இந்த திட்டம் குறித்து விரிவாக திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் இந்த திட்டம் வரும் 15ம் தேதி நடைமுறைக்கு வருகிறது. மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடைபெறும் இந்த விழாவில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்கிறார்.
இதுகுறித்து ஆந்திர மாநில அரசின் ஆலோசகர் பரகால பிரபாகர், ஹைதராபாதில் செய்தியாளர்கள் மத்தியில் கூறியதாவது:
கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளை இணைப்பதன் பயனாக, 80 டி.எம்.சி. அளவு கோதாவரி நதி நீர், வறண்ட ராயலசீமா பகுதிக்கு கிடைக்கும். மேலும், 300 டி.எம்.சி. தண்ணீர் பல்வேறு ஏரிகள், அணைகள் ஆகியவற்றில் சேமிக்கப்பட்டு, பருவமழை பொய்க்கும் காலத்தில் மாநிலத்தின் வறட்சியை சமாளிக்கப் பயன்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் மூலம், ஆந்திரம் வறட்சி இல்லாத மாநிலமாக விரைவில் மாறும் என்று எதிர்பார்க்கலாம்" என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications