ஆசிரியையை பின்தொடர்ந்து சென்று மானபங்கப்படுத்திய ஆந்திர அமைச்சரின் மகன் கைது
ஹைதராபாத்: ஆசிரியையை காரில் பின்தொடர்ந்து சென்று மானபங்கப்படுத்திய ஆந்திர மாநில சமூக நலத்துறை அமைச்சர் ரவீலா கிஷோரின் மகன் இன்று கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநில சமூக நலத்துறை அமைச்சராக இருப்பவர் ரவீலா கிஷோர். அவரது மகன் சுஷீல் ரவீலா(30). கடந்த வெள்ளிக்கிழமை மாலை பாத்திமா பேகம் என்ற ஆசிரியை பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது காரில் வந்த சுஷீல் பாத்திமாவை பின்தொடர்ந்துள்ளார். மேலும் அவர் பாத்திமாவை பிடித்து காருக்குள் இழுத்துள்ளார். பாத்திமா அவரின் பிடியில் இருந்து தப்பி கூச்சலிட்டார். அப்பகுதி மக்கள் குடிபோதையில் இருந்த சுஷீல் மற்றும் அவரது கார் டிரைவர் ரமேஷ் ஆகியோரை அடித்து நொறுக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
அப்போது சுஷீல் தப்பியோடிவிட்டார். போலீசாரும் அவரை தேடிப் பிடிக்க முயற்சி செய்யவில்லை என்பதை அறிந்த பாத்திமா காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுஷீல், ரமேஷுக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பினர். இந்நிலையில் சுஷீல் மற்றும் ரமேஷ் ஆகியோர் இன்று காலை போலீசில் சரண் அடைந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

சாலையில் சென்ற நாய்க்குட்டியை காப்பாற்றவே காரை நிறுத்தியதாகவும், பாத்திமா அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஊரை கூட்டி தன்னை அடிக்க வைத்ததாகவும் சுஷீல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் கூறுகையில்,
நானும், என் குடும்பமும் சட்டத்தை மதிப்பவர்கள். இதை சட்டத்தின் போக்கில் விட்டுவிடுகிறேன். என் மகன் எந்த தவறும் செய்யவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்கட்சிகள் செய்த சதி இது என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications