ஆந்திராவில் பெண் அதிகாரியை மிரட்டிய ஆளுங்கட்சி எம்எல்ஏ கைது.. ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி உத்தரவு
அமராவதி: பெண் அதிகாரியை மிரட்டிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஸ்ரீதர் ரெட்டியை கைது செய்துள்ளது ஆந்திரமாநில போலீஸ். தொலைக்காட்சியில் வந்த செய்திகளின் அடிப்படையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை எடுக்குமாறு நேரடியாக டிஜிபிக்கு உத்தரவிட்டதால் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் ரூரல் தொகுதி எம்.எல்.ஏ ஸ்ரீதர்ரெட்டி. இவர் ஆந்திராவை ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.
ஆளும் கட்சியைச் சேர்ந்தவரான இவர் , நெல்லூர் பகுதி மண்டல வளர்ச்சி அதிகாரி சரளா என்பவரை தொலைப்பேசியில் மிரட்டியதாகவும் பின்னர் வீட்டுக்கு வந்து குடும்பத்தை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

வாங்க போலீஸ் மறுப்பு
இது தொடர்பாக சரளா, நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்திருக்கிறார். ஆளும் கட்சி எம்எல்ஏ ஸ்ரீதர்ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியறுத்தி உள்ளார். ஆனால் சரளாவின் புகாரை வாங்க அந்த போலீஸ் ஸ்டேசனில் உள்ள அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

அலைகழிப்பு
ஸ்டேசனில் சப்-இன்ஸ் பெக்டர் இல்லாததால் அவரின் புகாரை வாங்க முடியாது என்று கூற மறுத்து அலைகழித்துள்ளார்கள். ஆனால் சரளா தான் சப்- இன்ஸ்பெக்டர் வரும் வரை காத்திருப்பதாக கூறி அங்கேயே அமர்ந்து கொண்டிருந்தார்.

டிவியை பார்த்த ஜெகன்
இந்த செய்தி டி.வி. சேனல்களில் ஒளிபரப்பாகியது. இதைப் பார்த்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உடனே டி.ஜி.பி., கலெக்டரை தொடர்பு கொண்டு என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

அதிகாரியிடம் விசாரணை
இதையடுத்து ஆந்திர டி.ஜி.பி. சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பெண் அதிகாரியிடம் விசாரணை நடத்தினார். பின்னர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் எம்.எல்.ஏ. மிரட்டியது குறித்து தகவலை கூறியிருக்கிறார்.

எம்எல்ஏ கைது
இதை கேட்ட ஜெகன்மோகன் ரெட்டி யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுங்கள். தயவு தாட்சணை வேண்டாம் என்றார் இதனால் பெண் அதிகாரியை மிரட்டிய ஸ்ரீதர்ரெட்டி எம்.எல்.ஏ.வை போலீசார் உடனடியாக கைது செய்தனர்- ஆளும் கட்சி எம்எல்ஏவை கைது செய்ய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்ட சம்பவம் அம்மாநில மக்கள் மற்றும் கட்சிகளிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications