தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் வழங்க ஆந்திரா ஒப்புதல்! பன்னீர்செல்வம் பயணத்திற்கு வெற்றி
தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் வழங்க ஆந்திர அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இருமாநில முதல்வர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமராவதி: தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் வழங்க ஆந்திர அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆந்திர தலைநகர் அமராவதிக்கு சென்றார். அங்கு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து 2.5 டிஎம்சி தண்ணீர் வழங்க ஆந்திர அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இருமாநில முதல்வர்களின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பராமரிப்பு தொகை 433 கோடி ரூபாய் ஒதுக்குவது குறித்து அடுத்த வாரம் திருப்பதியில் அடுத்த வாரம் இருமாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வரை யாரும் எடுக்காத முயற்சியாக முதல் முறையாக ஆந்திராவுக்கு நேரில் சென்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நடத்திய பேச்சுக்கு ஒரு நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது.
தெலுங்கு கங்கை நீர் பங்கீடு தொடர்பாக ஆந்திரா சென்று, அம்மாநில முதல்வருடன் தமிழக முதல்வர் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தியது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு இரண்டு மாநிலங்களுக்கும் இடையே கடிதப்போக்குவரத்து மட்டுமே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications