மணிப்பூர் நிர்வாண வீடியோ.. முஸ்லிம் நபர் கைதானதாக தப்பு செய்தி: மன்னிப்பு கேட்ட ANI
இம்பால்: மணிப்பூரில் குகி பழங்குடியின இளம் பெண்களை நிர்வாணப்படுத்தி சாலையில் ஊர்வலமாக இழுத்து வந்து கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் இஸ்லாமியர் கைது செய்யப்பட்டதாக வெளியிட்ட செய்திக்கு முன்னணி செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. மன்னிப்பு கேட்டு உள்ளது.
மணிப்பூரில் பெரும்பான்மை சமுதாயத்தினரான மெய்திகளுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதற்காக குகி பழங்குடி சமூகத்தினருக்கு எதிராக வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இரண்டரை மாதங்களாக நடந்து வந்த வன்முறை வெறியாட்டம் கடந்த 3 நாட்களுக்கு முன் வெளியான வீடியோவில் உலகளவில் கவனம் பெற்றுள்ளது.

கடந்த மே 4 ஆம் தேதி குகி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் இழுத்து வந்து கும்பலாக பலாத்காரம் செய்த வீடியோ வெளியாகி அதிர்வுகளை ஏற்படுத்தியது.. இதனை தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரரையும் அவரது நண்பரையும் அவர்கள் கொடூரமாக கொலை செய்ததாக கூறப்படுகிறது.
77 நாட்கள் கழித்து வெளியான இந்த வீடியோவை தொடர்ந்து பிரதமர் மோடி இதுபற்றி கருத்து தெரிவித்தார். மணிப்பூர் சம்பவம் வெட்கக்கேடானது என்றும், எந்த குற்றவாளியும் தப்பிக்கமாட்டார்கள் எனவும் உறுதியளிப்பதாக கூறினார். நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாள் இதனால் ஸ்தம்பித்து ஒத்திவைக்கப்பட்டது.
இதுபற்றி தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை நடத்த முடிவு உள்ளதுடன் அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கிற்கு தொடர்புகொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி உள்ளிட்டோர் இது பற்றி விளக்கம் கேட்டு உள்ளனர்.
இந்த கொடூரம் அரங்கேறி 78 நாட்கள் கழித்து குற்றத்தில் ஈடுபட்ட 4 பேரை கடந்த வியாழன் அன்று மணிப்பூர் காவல் துறை கைது செய்தது. பதைபதைக்க வைக்கும் வீடியோவில் முதல் வரிசையில் பெண்ணை இழுத்து செல்லும் பச்சை டீ சர்ட் அணிந்த ஒரு இளைஞரை குறிப்பிட்டு அவர் கைது செய்யப்பட்டதாக மணிப்பூர் போலீஸ் தெரிவித்தது.
32 வயதான அந்த இளைஞரின் பெயர் ஹுய்ரெம் ஹெரொதாஸ் மெய்தி. இவர் அல்லாமல் மேலும் 3 பேரை அடுத்தடுத்து கைது செய்து இருக்கிறது மணிப்பூர் காவல்துறை. இதில் முதல் நபரை தவிர்த்து மற்றவர்களின் பெயரை மணிப்பூர் காவல் துறை வெளியிடவில்லை. 4 பேரை தௌபால் மாவட்ட காவல்துறை கைது செய்து உள்ளதாக மணிப்பூர் போலீஸ் கட்டுப்பாட்டு அறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அதே அறிக்கையில் இந்த நிர்வாண வீடியோவுக்கு தொடர்பு இல்லாத வேறொரு குற்றத்துக்காக இம்பால் கிழக்கு மாவட்ட போலீசாரால் முஹம்மது ஹிலிம் என்ற 38 வயது நபரை கைது செய்து உள்ளதாக காவல்துறை தெரிவித்தது. இதுகுறித்து அடுத்தடுத்து ட்வீட்டரிலும் மணிப்பூர் போலீஸ் வெளியிட்டது.

நிலைமை இப்படி இருக்க இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான ANI மணிப்பூர் நிர்வாண வீடியோ வழக்கில் முஹம்மது ஹிலிம் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டது. இதனை பார்த்து பல்வேறு ஊடகங்கள் இதனை செய்தியாக வெளியிட்டன. உடனே வலதுசாரிகள் இதனை அதிகளவில் சமூக வலைதளங்களில் பரப்பி மதச்சாயம் பூச முயன்றனர்.
இதுகுறித்து பலரும் ANI யை ட்விட்டரில் சுட்டிக்காட்டி வதந்தி என்று விமர்சித்தனர். இதனை அடுத்து அந்த செய்தியை நீக்கிய ANI நேற்று தவறான செய்திக்காக மன்னிப்பு கேட்டு ட்விட்டரில் பதிவிட்டு உள்ளது. மணிப்பூர் போலீசின் அடுத்தடுத்த ட்வீட்டுகளால் குழப்பம் அடைந்துவிட்டதாகவும், தவறான தகவல் என்று அறிந்தவுடன் நீக்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications