அனிதாவுக்கு நீதி கேட்டு.. டெல்லியிலும் வெடித்தது மாணவர் போராட்டம்
அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு டெல்லியில் தமிழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காமல் மனமுடைந்த அனிதா வெள்ளிக்கிழமை தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த மரணத்திற்கு நீதி கேட்டு டெல்லியில் தமிழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி முழக்கமிட்டு வருகின்றனர்.

தலைநகர் டெல்லியிலும் அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக மாணவர்கள்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அனிதாவின் மரணத்திற்கு மவுன அஞ்சலி செலுத்திய மாணவர்கள், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications