ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மீது மற்றொரு மாணவியும் பாலியல் புகார்
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி மீது மற்றொரு சட்டக்கல்வி பயிற்சி மாணவியும் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்விக்கான தேசியப் பல்கலைக்கழகத்தின் பயிற்சி மாணவி ஒருவர் உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி மீது கடந்த 6ந் தேதி பாலியல் புகாரைத் தெரிவித்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் நடைபெற்ற பாலியல் பலாத்கார விவகாரத்தால் நாடே கொந்தளித்துக் கொண்டிருந்தது. அப்போது, அந்த நீதிபதி ஒரு ஹோட்டல் அறையில் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று அந்த மாணவி தனது இணையதள ப்ளாக்கில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.சதாசிவம் முன் சமீபத்தில் எழுப்பப்பட்டது. பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறிய அவர், மாணவியின் புகார் குறித்து விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த அதே கல்வி நிலையத்தில் படிக்கும் மற்றொரு பயிற்சி மாணவி கடந்த 11ந் தேதி ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் கடந்த ஆண்டு என்னை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கினார். அப்போது அவர் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பதவி வகித்து வந்தார் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே பேராசிரியர் எஸ்.என்.சிங் என்பவர் அளித்த புகாரின்பேரில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார் குறித்து டெல்லி போலீஸார் முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications