416 பாக்கெட்டுகள்.. 52 கிலோ "சூப்பர்-90" வகை வெடிமருந்து.. காஷ்மீரில் தீவிரவாத சதி முறியடிப்பு!
ஸ்ரீநகர்: புல்வாமா தாக்குதல் போலவே எல்லையில் தீவிரவாதிகள் நடத்த திட்டமிட்டு இருந்த தாக்குதல் தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் இதற்காக 52 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் படை வீரர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதேபோல் இன்னொரு தாக்குதலை நடத்த காஷ்மீரில் தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்த நிலையில் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது.

சோதனை
காஷ்மீரில் உள்ள கடிகால் பகுதி அருகே இருக்கும் கரேவா என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது . உளவு தகவலின் அடிப்படையில் இங்கே போலீசார் மற்றும் 42 ராஷ்டிரிய ரைபில் படையினர் இணைந்து கூட்டு சோதனையில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள். கரேவா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நடந்த சோதனையில் 52 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மருந்து
அந்த வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் 416 பாக்கெட்டுகள் வெடி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாக்கெட்டும் 125 கிராம் இருந்துள்ளது. இதன் மூலம் 50 சிறிய ரக குண்டுகளை உருவாக்க முடியும். மொத்தம் 50 டெட்டனேட்டர்கள் இங்கே கண்டுபிடிக்கப்பட்டள்ளது .

என்ன தாக்குதல்
இந்த வீடு, புல்வாமா தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த வெடி மருந்து மிகவும் வித்தியாசமானது என்கிறார்கள். இதை "Super-90" அல்லது S-90 என்று அழைப்பார்கள். இது மிகவும் சக்தி வாய்ந்த குண்டுகள். இந்த வெடிமருந்து அதிக சேதத்தை உண்டாக்கும் திறனை கொண்டது.

உளவு தகவல்
சரியான நேரத்தில் கிடைத்த உளவு தகவல் காரணமாக இந்த வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புல்வாமா தாக்குதல் போல இன்னொரு தாக்குதலை நிகழ்த்தி இருக்கலாம். ஆனால் அதை தற்போது தடுத்து இருக்கிறோம். இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறோம் என்று 42 ராஷ்டிரிய ரைபில் படையினர் விளக்கம் அளித்துள்ளது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications