மகா. ஆளுநர் சங்கரநாராயணன் நள்ளிரவில் மிஸோரத்துக்கு மாற்றம்!
டெல்லி: ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்ட மகாராஷ்டிர ஆளுநர் சங்கரநாராயணை மத்திய அரசு அதிரடியாக மிஸோரம் மாநிலத்துக்கு நேற்று நள்ளிரவுக்கு மேல் மாற்றி உத்தரவிட்டது.
கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது ஆளுநர்களாக நியமிக்கப்பட்ட 12 பேரை ராஜினாமா செய்யுமாறு மோடி உரசு உத்தரவிட்டது. சிலர் இதை ஏற்றனர், சிலர் முரண்டு பிடித்தனர். அதன் பின்னர் அவர்களும் விலக சம்மதித்தனர். அதன்படி, உ.பி, மேற்கு வங்கம், சட்டிஸ்கர், நாகாலாந்து, கோவா ஆகிய மாநில ஆளுநர்கள் பதவி விலகினர்.
ஆனால் மகாராஷ்டிர ஆளுநராக இருந்து வந்த கே. சங்கரநாராயணன் விலக முடியாது என்று கூறி விட்டார். இந்த நிலையில்தான் அவரை அதிரடியாக மிஸோரத்துக்கு மாற்றியுள்ளது மத்திய அரசு.

நள்ளிரவுக்கு மேல்
நேற்று நள்ளிரவுக்கு மேல் சங்கரநாராயணனை இடமாற்றம் செய்தது மத்திய அரசு. இதுதொடர்பான உத்தரவு ஒன்றை குடியரசுத் தலைவர் மாளிகை, 82 வயது சங்கரநாராணனுக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தது.

2017 வரை மிஸோரம்தான்
சங்கரநாராயணன் பதவி விலக முடியாது என்று கூறியிருப்பதால் 2017ம் ஆண்டு வரை அவர் ஆளுநராக நீடிப்பார் என்று தெரிகிறது.

குஜராத் ஆளுநருக்குக் கூடுதல் பொறுப்பு
குஜராத் ஆளுநர் ஓம் பிரகாஷ் கோஹ்லி, மகாராஷ்டிராவை கூடுதல் பொறுப்பாக கவனிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

ஏற்கனவே நீக்கப்பட்ட கமலா பேனிவால்
முன்னதாக குஜராத் ஆளுநராக இருந்து வந்த கமலா பேனிவாலை, மோடி அரசு அதிரடியாக மிஸோரத்துக்கு மாற்றியது. பின்னர் அவர் ஓய்வு பெற 2 மாதங்களே இருந்த நிலையில் அவரை டிஸ்மிஸ் செய்தது என்பது நினைவிருக்கலாம். இப்போது சங்கரநாராயணன் மீது பாய்ந்துள்ளது மத்திய அரசு. மோடி முதல்வராக இருந்தபோது அவருடன் பல விஷயங்களில் மோதியவர் பேனிவால் என்பது நினைவிருக்கலாம்.

கோர்ட்டுக்கு இழுத்த ஆசிஸ் குரேஷி
முன்னதாக உத்தரகாண்ட் ஆளுநர் ஆசிஸ் குரேஷி, இடமாற்ற விவகாரத்தில் மத்திய அரசை கோர்ட்டுக்கு இழுத்துள்ளார் என்பது நினைவிருக்கலாம். இவருக்கும் விலகுமாறு நெருக்கடி தரப்பட்டது. ஆனால் குரேஷி உச்சநீதிமன்றத்தில் கேஸ் போட்டு விட்டார். அவரை பதவி விலகுமாறு மத்திய உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி உத்தரவிட்டாரா என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் விளக்கமும் கேட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications