சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தில் மீண்டும் கோரச் சம்பவம்.. 3 பெண்கள் பரிதாப பலி.. நடந்தது என்ன?
குண்டூர் : ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வழங்கப்பட்ட இலவச புடவையை வாங்கச் சென்ற 3 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த மேலும் சில பெண்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, டிசம்பர் 29ஆம் தேதி தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 3 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 நாட்களுக்கு முன்னர் தான் இதுபோன்ற கோர நிகழ்வு நடைபெற்று 8 பேர் பலியான நிலையில் தற்போது மீண்டும் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரபாபு நாயுடு
சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஆந்திர மாநிலம் குண்டூரில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு, ஏழை பெண்களுக்கு கைத்தறி சேலைகளை வழங்கினார். இந்த விழாவில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். சந்திரபாபு நாயுடு சிலருக்கு சேலைகளை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

3 பெண்கள் பரிதாப பலி
பின்னர் அங்கு சேலை வாங்குவதில் பெண்களிடையே போட்டி நிலவியதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான பெண்கள் முண்டியடித்துக் கொண்டு மேடையை நோக்கி சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் கீழே விழுந்தனர். இதில் கால்களில் மிதிபட்டு 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் காயமடைந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த மேலும் சில பெண்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

3 நாட்களுக்கு முன்
இதேபோல் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 29ஆம் தேதி நெல்லூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் சந்திர பாபு நாயுடு. கந்துகூரு என்டிஆர் சர்க்கிள் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்கு சென்றார். சந்திரபாபு நாயுடுவின் பேச்சை கேட்க ஏராளமான தொண்டர்கள் கூடியிருந்தனர். சந்திரபாபு நாயுடு வாகனத்தின் பின்னால் வந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் பொதுக்கூட்ட மேடை அருகே வாகன நிறுத்துமிடத்தை நோக்கி மெதுவாக நகர்ந்தன.

அடுத்தடுத்து - கோர சம்பவம்
ஆனால் அதே இடத்தில் சாலையின் இருபுறமும் மோட்டார் பைக்குகள் ஏராளமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கிய 2 பெண்கள் உட்பட 8 தொண்டர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். ஆந்திர அரசு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்காத காரணத்தாலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தவறியதாலும் தான் இந்த விபத்து நடந்ததாக சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். இந்நிலையில், மீண்டும் சந்திர பாபு நாயுடு பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 3 பெண்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications