எனக்கும், கோஹ்லிக்கும் இடையே இருக்கு, போதுமா?: நடிகை அனுஷ்கா
மும்பை: தான் கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியை காதலிப்பது உண்மை தான் என்று பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலிக்கிறார்கள் என்று முதலில் பாலிவுட் கிசுகிசுத்தது. அதன் பிறகு அனைவரும் கிசுகிசுத்தார்கள். பின்னர் வெளிப்படையாகவே பேசினார்கள். அனுஷ்காவும், கோஹ்லியும் கைகோர்த்து ஊர் சுற்றினார்கள், வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்கள். காதலா என்று கேட்டால் மவுனமாகிவிடுவார்கள்.
இந்நிலையில் தான் அனுஷ்கா முதன்முதலாக தன்னுடைய காதல் பற்றி பேசியுள்ளார்.

கோஹ்லி
கோஹ்லி பற்றி கேட்டால் பதில் அளிக்கவில்லையே தவிர நான் அவரை காதலிப்பதை மறுக்கவில்லையே என்று அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

காதல்
நான் கோஹ்லியை காதலிக்கிறேன். அந்த காதலை மதிக்கிறேன். நான் காதலை பற்றி பேசாததற்கு காரணம் உள்ளது. அது பற்றி பேசினால் என் வேலை பற்றி யாரும் பேச மாட்டார்கள் என்றார் அனுஷ்கா.

ஆமீர்
பி.கே. விளம்பர நிகழ்ச்சியில் ஆமீர் கான், அனுஷ்கா சர்மா கலந்து கொண்டனர். அப்போது அனுஷ்காவிடம் கோஹ்லியுடனான காதல் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு இதை பற்றி கேட்க இது உகந்த இடம் இல்லை என்றார். அதற்கு ஆமீரோ வாங்க இடத்தை மாற்றுவோம், எனக்கு பதில் தெரிந்தாக வேண்டும் என்று விளையாட்டாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரன்வீர் சிங்
கோஹ்லியுடனான காதலை முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ள அனுஷ்கா தனது முன்னாள் காதலரான நடிகர் ரன்வீர் சிங்கையும் புகழ்ந்து பேசியுள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications