விவசாயிகள் செத்துக் கொண்டிருக்க....சொகுசு வாழ்க்கைக்கு ரூ.100 கோடியா?... நாயுடு மீது பாயும் அம்புகள்
ஹைதராபாத்: பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஆந்திர மாநிலத்தில் ஏழை விவசாயிகளும் வறுமையில் மடிந்து கொண்டிருக்க சொந்த செலவுக்கு 100 கோடி ரூபாய் செலவழித்த அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கடந்த சில மாதங்களில் மட்டும் தனது அலுவலகங்கள் மறு சீரமைத்ததற்கும், தனியார் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு அமர்த்தி அரசுப் பயணம் மேற்கொண்டதற்கும், இவ்வளவு பெரிய தொகையை செலவழித்துள்ளார்.

மேலும் புதிய தலைநகரம் அமைக்கும் பணிக்காக மக்களிடமிருந்து பண வசூல் வேறு செய்கிறார் நாயுடு. இதுவும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தனது செலவைக் கட்டுப்படுத்த முடியாத நாயுடு எப்படி மக்களிடம் பணம் கேட்கலாம் என்றும் எதிர்க்கட்சிகள் கேட்கின்றன.
அலுவலகங்கள் சீரமைப்புக்கு சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டியது தானே என்றும் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக எதிர்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. ஹைதராபாத், விஜயவாடாவில் உள்ள தனது அலுவலகங்களை பெரும் பொருட் செலவில் புதுப்பித்துள்ளார் நாயுடு. இதற்கு அரசுப் பணத்தைத்தான் அவர் செலவிட்டார்.
தலைமைச் செயலகத்தில் அவரது அலுலகமும் பெரும் பொருட் செலவில் புதுப்பிக்கப்பட்டன. மேலும் ஹைதராபாத்தில் உள்ள லேக் வியூ கெஸ்ட் ஹவுஸானது ரூ. 7 கோடியில் புதுப்பிக்கப்பட்டது.
மக்களின் வரிப்பணத்தை எடுத்து தண்ணீராக செலவிட்டு வருகிறார் சந்திரபாபு நாயுடு என்று குற்றச்சாட்டுக்கள் கிளம்பியுள்ளன. மக்கள் பணத்தை சொகுசு வாழ்க்கைக்கு செலவிட்ட சந்திரபாபு நாயுடு மீது பாய எதிர்கட்சிகள் தயாராகி வருகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications