"என்எஸ்ஜி".. சீனா மட்டுமல்ல.. இந்த 5 நாடுகளும்தான் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுக்கின்றன!
டெல்லி: அணு சக்தி வினியோகம் செய்யும் நாடுகள் குழுவில் இந்தியாவை உறுப்பு நாடாக சேர்க்கவிடாமல் சீனா மட்டுமின்றி மேலும் 4 நாடுகளும் தீவிர எதிர்ப்பு காட்டி வருகின்றன.
அணுசக்தி வினியோகம் செய்யும் நாடுகள் குழுவில் (என்.எஸ்.ஜி.) 48 நாடுகள் உறுப்பினர்களாக இடம்பெற்று உள்ளன. இந்த குழுவில் இடம் பெறுவதற்கு இந்தியா முயற்சி செய்து வருகிறது. இதற்காக இந்தியா கடந்த மே 12ம் தேதி விண்ணப்பித்தது. இதேபோல் இந்த குழுவில் சேர பாகிஸ்தானும் விண்ணப்பித்து உள்ளது.
அணுசக்தி நாடுகள் குழுவில் இந்தியா சேருவதற்கு அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட பல உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

அணு ஆயுத பரவல் தடை
ஆனால் இந்த குழுவில் இந்தியாவை சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்றும், இந்தியாவை இந்த குழுவில் சேர்த்தால் தெற்கு ஆசியாவில் அணுஆயுத போட்டி அதிகரிக்கும் என்றும் சீனா கூறுகிறது.

மேலும் நான்கு நாடுகள்
இதேபோல துருக்கி, பிரேசில், மெக்சிகோ, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதில் துருக்கி ஒருபடி மேலேபோய், இந்தியாவை அணுசக்தி வினியோகம் செய்யும் நாடுகள் குழுவில் சேர்க்க வேண்டுமானால், பாகிஸ்தானையும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளது.

காத்திருக்கும் இந்தியா
இதில் மெக்சிகோவும், சுவிட்சர்லாந்தும், இந்தியாவின் முயற்சிக்கு கைகொடுப்பதாக முன்னர் அறிவித்திருந்த நிலையில் இப்போது பின்வாங்கியுள்ளன. எனவே அடுத்ததாக இதுகுறித்து நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்திற்காக இந்தியா காத்துக்கொண்டுள்ளது.

உருவான கதை
1974ம் ஆண்டு அணுசக்தி வினியோகம் செய்யும் நாடுகள் குழு உருவாக்கப்பட்டது என்பதும், அணு ஆயுத ஏற்றுமதி, இறக்குமதியை மேற்கொள்ள இந்த நாடுகளுக்குள் புரிந்துணர்வு உள்ளது என்பதும் நினைவுகூறத்தக்கது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications