பாஸ்.. அந்தப் பக்கம் போகாதீங்க.. அம்மாவும், மகளும் அடிச்சிக்குறாங்க!
டெல்லி: அப்னா தள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மகள் அனுப்பிரியாவுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதற்கு அவரது தாயாரும் அப்னா தள் கட்சித் தலைவருமான கிருஷ்ணா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அத்துடன் பாரதிய ஜனதாவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாகவும் அப்னா தள் அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை அண்மையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 35 வயதான அனுப்பிரியா படேல் அமைச்சராக இடம்பெற்றார். தற்போது அனுப்பிரியா அமைச்சராக்கப்பட்டது பாஜகவுக்கு தலைவலியாக உருவெடுத்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் தலித் தலைவரான பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரான கன்சிராமின் வலதுகரமாக இருந்தவர் குர்மி எனும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சோன்லால் பட்டேல். ஆனால் 1995-ல் கன்சிராம் தமக்கு அடுத்து மாயாவதியை முன்னிறுத்த தொடங்கிய போதே பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து வெளியே அப்னா தள் கட்சியை உருவாக்கினார் சோன்லால் பட்டேல்.
குர்மி சமூகத்தில் செல்வாக்குடன் இருந்து வருகிறது அப்னா தள் கட்சி. 2009-ல் சோன்லால் பட்டேல் மறைவைத் தொடர்ந்து அவரது மனைவி கிருஷ்ணா அப்னாதள் கட்சித் தலைவரானார். கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அப்னா தள் இடம்பெற்று 2 இடங்களில் போட்டியிட்டது. போட்டியிட்ட 2 இடங்களிலும் அப்னா தள் வென்றது. இதில் அக்கட்சி பொதுச்செயலரான அனுப்பிரியாவும் ஒருவர்.
இதனைத் தொடர்ந்து அனுப்பிரியா தம்முடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். தாம் ராஜினாமா செய்ததால் நடைபெறும் இடைத்தேர்தலில் கணவர்தான் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என அனுப்பிரியா விரும்பினார். ஆனால் தானே போட்டியிடுவேன் என அவரது தாயார் கிருஷ்ணா அடம்பிடித்தார். இதனால் அப்னாதள் இரண்டாக உடைந்தது. அனுப்பிரியாவும் அவரது ஆதரவாளர்களும் கடந்த மே மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில்தான் மத்திய அமைச்சரவையில் அனுப்பிரியாவுக்கு இடம் கொடுக்கப்பட்டது. இதை அவரது தாயாரும் அப்னாதள் தலைவருமான கிருஷ்ணா கடுமையாக எதிர்த்து வருகிறார். அத்துடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகவும் அப்னா தள் முடிவு செய்துள்ளது.
இதனால் அனுப்பிரியாவை தலைவராக கொண்ட புதிய கட்சி ஒன்றை உருவாக்கி அதனுடன் தேர்தல் உடன்பாடு வைத்து உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பாஜக திட்டமிட்டு வருகிறது.
-
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications