ஜெயலலிதா எந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்... ப்ரீத்தா ரெட்டி சொன்னது இது தான்?
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனை அழைத்து வரப்படும் போது படுத்த படுக்கையாகத் தான் இருந்தார் என்று அந்த மருத்துவமனையின் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி : மறைந்த முதல்வர் ஜெயலலிதா படுத்த படுக்கையாகத் தான் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் என்றும் அதன் பிறகு உடல்நலன் தேறிய நிலையில் தான் திடீரென உயிரிழந்தார் என்றும் அப்பலோ மருத்துவமனை துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி கூறியுள்ளார்.
ஓராண்டுகளைக் கடந்தாலும் மர்மம் விலகாத நிலையில் இருக்கிறது அதிமுகவின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் மரணம். இந்நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது என்ன நிலையில் இருந்தார்,சிகிச்சையின் போது அவருக்கு அருகில் யார் இருந்தார்கள் என்ற தகவல்களை அப்பலோ மருத்துவமனையில் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி கூறியுள்ளார்.
டெல்லியில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளதாவது : ஜெயலலிதாவிற்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. டெல்லி எய்ம்ஸ் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சிறப்பான மருத்துவர்கள் அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை முடிவில் அனைத்து மர்மங்களும் விலகும் என்று நினைக்கிறேன்.

ஜெ. அனுமதித்தவர்கள் மட்டுமே
ஒவ்வொரு நோயாளிக்கும் தனியுரிமை உண்டு. எந்த நோயாளியும் தனக்கு அளிக்கப்படும் சிகிச்சைய மறற்வர்கள் பார்க்கவேண்டும் என்று விரும்பமாட்டார்கள். ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கும் போது அவரால் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே அரசுக்கு அருகில் இருந்தனர்.

உலக நடைமுறை தான்
உலக அளவில் பிரபலமான மருத்துவர்கள், சிறந்த பயிற்சி பெற்ற செவிலியர்கள் மற்றும் டெக்னீஷியன்கள், சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த பிசியோதெரபிஸ்ட் என அனைவருமே மருத்துவத் துறையில் சிறந்தவர்கள். சிகிச்சைக்கு தொடர்பில்லாதவர்கள் யாருமே அவருக்கு அருகில் அனுமதிக்கப்பவில்லை. இது தான் உலகம் முழுவதும் உள்ள நடைமுறை.

கருத்து சொல்ல ப்ரீத்தா மறுப்பு
ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்ட போது நான் அவருக்கு அருகில் இல்லை, இதனால் நான் இதை பற்றி கருத்து கூற முடியாது. மூச்சுவிட முடியாத நிலையில் படுத்த படுக்கையாகத் தான் ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார், அவருக்கு உடனடி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்
இதனைத் தொடர்ந்து அவர் உடல்நலன் தேறி வந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் உயிரிழந்துவிட்டார். ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த ஒளிவு மறைவும் இல்லை என்றும் ப்ரீத்தா ரெட்டி தெரிவித்தார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications