முலாயம் பிறந்தநாள் விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் "சாங்"... லாலு மட்டும் மிஸ்ஸிங்!
சைபாய்/உ.பி: உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் 76வது பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.
உத்திரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவின் 76வது பிறந்த நாள் விழா, அவரது சொந்த ஊரான சைபாய் கிராமத்தில் கலாச்சார திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. சைபாய் நகரமானது லக்னோவிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இந்நிலையில், நேற்று சைபாயில் வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது இசைக் குழுவுனருடன் கலந்துகொண்டு இசை நிகழ்ச்சியை நடத்தினார். அவருடன் பாடகர் ஹரிஹரனும் இணைந்து பாடல்களைப் பாடினார்.

லாலு வரவில்லை...
சைபாய் நகரில் உள்ள மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கலந்து கொள்ளவில்லை.

கோபம்...
பீகாரில் முதல்வர் நிதீஷ் குமார் பதவியேற்பு விழாவுக்கு முலாயம் சிங் யாதவ் வரவில்லை. மேலும் சமாஜ்வாடி தலைவர்கள் யாரும் வரவில்லை. அவரது மருமகள் டிம்பிள் யாதவைக் கூட முலாயம் அனுப்பி வைக்கவில்லை. இதனால் கோபத்தில் இருந்து வருவதால்தான் லாலு வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

விருந்து...
பிறந்த நாளையொட்டி 76 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக் வைக்கப்பட்டு அதை முலாயம் சிங் யாதவ் வெட்டினார். பிறந்த நாள் விருந்தில், இத்தாலிய, சீன தாய் நாட்டு உணவு வகைகள் படைக்கப்பட்டன. இதற்காக டெல்லி, மும்பையிலிருந்து சிறப்பு சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

விருந்தினர்கள்...
பிறந்த நாள் விழாவில் ஒரு லட்சம் பேர் விருந்தினர்களாக அவைக்கப்பட்டிருந்தனர். முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, நடிகர்கள் அமீதா்ப் பச்சன், சல்மான் கான், ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இதில் அடக்கம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications