ஆஹா.. 3000 கி.மீ தூரத்துக்கு ரெடியாகிறது "கவாச்"! மத்திய அரசு எடுத்த அதிரடி.. இனிமேல் நிம்மதி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்தையடுத்து, மத்திய ரயில்வே அமைச்சகம் முக்கிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறது.
இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே மோசமான ரயில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.. இப்படித்தான் கடந்த வருடம் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் கிட்டத்தட்ட 280 பேர் உயிரிழந்தனர்.

நேற்றுமுன்தினம்கூட, மேற்கு வங்க மாநிலத்தில் ரயில் விபத்து நடந்துள்ளது.. கொல்கத்தா நோக்கி சென்ற கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த ரயில் விபத்தை தொடர்ந்து கவாச் குறித்த கேள்வி எழுந்துள்ளது.
தண்டவாளம்: எப்போதெல்லாம் இதுபோன்ற ரயில் விபத்துகள் நடக்கின்றனவோ, அப்போதெல்லாம் கவாச் குறித்த சலசலப்பு எழுந்துவருகிறது.. தண்டவாளங்களில் இரண்டு ரயில்கள் மோதுவதை தடுக்கும் பாதுகாப்பு அமைப்புதான் இந்த கவாச்.
ரயில்வே துறையின் ஆர்டிஎஸ்ஓ எனப்படும், ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பு, கவச் என்ற தொழில்நுட்பத்தை 2019ல் உருவாக்கியது. ரயில் டிரைவர்கள் அவசர காலத்தில் ரயிலை நிறுத்தாமல் போனால், எதிர்வரும் ஆபத்தை உணர்ந்து ரயில் தானாகவே நிற்கும்படியான தொழில்நுட்பத்தை இந்த "கவச்" அளிக்கிறது.
சான்றிதழ்: இந்த கவாச் குறித்து ரயில்வே அமைச்சகம் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.. அதில், "கவச் தொழில்நுட்பத்துக்கு 2019ல் சான்று அளிக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா பரவல் காரணமாக பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இப்போது நிலவரப்படி, 1465 கி.மீ. தூர வழித்தடங்கள், 121 ரயில்களில் இந்த தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 3000 கி.மீ. தூரத்திற்கு கவச் தொழில்நுட்பத்தை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
ரயில் தடங்களில் கண்ணாடி வட கம்பிகள், தொலைத்தொடர்பு கருவிகள் மற்றும் கோபுரங்கள் அமைப்பது, ரயில்வே ஸ்டேஷன்களில் தரவு மையங்கள் அமைப்பது, இறுதியில் ரயில்களில் கருவிகளை நிர்மாணிப்பது உட்பட பல்வேறு பணிகள் தொடர்புடையதால் நீண்ட கால அவகாசம் ஆகிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications