உங்களுடன் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?: மலாலாவை கேட்ட நடிகர் அர்ஜுன் கபூர்
மும்பை: பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் நியூயார்க் நகரில் பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாயை பார்த்ததும் உங்களுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று அவரிடம் கேட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த வாரம் குளோபல் சிட்டிசன் பெஸ்டிவல் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பெண் கல்விக்காக குரல் கொடுத்து தாலிபான்களால் சுடப்பட்டு மறுஜென்மம் எடுத்த பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்சாயும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மலாலா ஆற்றிய உரை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
The first & only time I rem askin some1 for a picture.She gives humanity hope for a better future @MalalaFund #Malala pic.twitter.com/Ax72r4a4R7
— Arjun Kapoor (@arjunk26) September 28, 2015 மலாலாவை பார்த்த அர்ஜுன் கபூருக்கு அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. வழக்கமாக நடிகர், நடிகைகளுடன் புகைப்படம் எடுக்கத் தான் பிறர் ஆசைப்படுவார்கள். இங்கு அர்ஜுன் மலாலாவிடம் சென்று உங்களுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டுள்ளார். அவர் சரி என்றதும் புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அர்ஜுன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஒருவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என நான் முதன்முதலாக கேட்டேன். அவர் மனிதத்திற்கு புதிய நம்பிக்கை அளிக்கிறார் #Malala என தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications