அண்ணாமலை யாத்திரையில் பர்ஸை பறிகொடுத்த அர்ஜுனமூர்த்தி! அறந்தாங்கியில் சலசலப்பு.. போலீசில் புகார்
அறந்தாங்கி: எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை யாத்திரையை தொடங்கியுள்ளார். இந்நிலையில் அறந்தாங்கியில் யாத்திரையில் அவருடன் பங்கேற்றபோது தன்னுடைய பரஸ் திருடுபோயுள்ளதாக அர்ஜுனமூர்த்தி போலீசில் புகார் அளித்துள்ளார்.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். இதில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நேருவுக்கு பின்னர் மூன்றாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் என்கிற பெருமையை மோடி பெறுவார். மட்டுமல்லாது 2025ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100வது ஆண்டு விழாக கொண்டாடப்படுகிறது.

இப்போது மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அனுமதி வழங்கப்படுவது பெரும் சிக்கலாக இருக்கிறது. இதே ஆட்சியில் இல்லாமல் இருந்தால் நிச்சயம் இதனை சிறப்பாக கொண்டாட முடியாது என பாஜகவுக்கு தெரியும் எனவே, தனது தாய் அமைப்பின் 100வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடவாவது பாஜக ஆட்சியில் இருப்பது கட்டாயமாகியுள்ளது.
எனவே தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை வகுத்து அதை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் 39+1 என 40 தொகுதிகள் இருக்கின்றன. இதில் 9 தொகுதிகளில் எப்படியாவது கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டும் என பாஜக கடுமையாக உழைத்து வருகிறது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் களமிறங்கியுள்ளனர். மாவட்டம்தோறும் பாஜக மாநாடுகளையும், பேரணி பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' எனும் யாத்திரையை தமிழ்நாட்டில் மேற்கொண்டிருக்கிறார். இதற்கான தொடக்க விழா ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இதில் அமித்ஷா உள்ளிட தேசிய முக்கிய புள்ளிகள் பங்கேற்றிருந்தன. இதனையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று திமுக மீது சரமாரியான விமர்சனங்களை வைத்து வருகிறார். அதேபோல பாஜக அரசின் சாதனைகளையும் கூறி வருகிறார்.
இந்நிலையில் அறந்தாங்கியில் கடந்த 2ம் தேதி அவர் யாத்திரை மேற்கொண்டிருந்தபோது தனது பர்ஸ் மிஸ்ஸாகியுள்ளதாக அர்ஜுனமூர்த்தி போலீசில் புகார் அளித்துள்ளார். பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்தவர்தான் இந்த அர்ஜுனமூர்த்தி. ரஜினி கட்சி தொடங்குவதாக பேச்சு அடிப்பட்ட நிலையில் தொடங்கப்படாத கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து கட்சி தொடங்கும் எண்ணத்தை ரஜினி கைவிட்ட நிலையில், அர்ஜுனமூரத்தி, கடந்த 2021ம் ஆண்டு இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி எனும் இயக்கத்தை தொடங்கினார்.
இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் அண்ணாமலை முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்து செயல்பட தொடங்கினார். தற்போது நடைபெற்று வரும் என் மண் என் மக்கள் யாத்திரையிலும் அவர் பங்கேற்றிருந்தார். இந்நிலையில்தான் அவரது பர்ஸ் திருடுபோயுள்ளது. இது குறித்து போலீசில் அவர் அளித்த புகாரில், "அறந்தாங்கியில் 02.08.2023ம் தேதி பஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சுமார் மாலை 07.00 மணியளவில் கூட்டத்தில் தனது மணிப்பர்ஸை யாரோ திருடி விட்டார்கள். மேற்படி திருடு போன பர்ஸில் 4 கிரிடிட் கார்டு ( AMEX, CITI, HDFC, AXIS ), ஆதார் கார்டு மற்றும் ரூபாய் 25,000/- இருந்தது" என்று கூறியுள்ளனர்.
முன்னதாக ஈரோட்டில் நடந்த பாஜகவின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் 9 பேரின் பர்ஸ் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications