காஷ்மீரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த ராணுவ வீரர்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மென்தார் தெஹ்சிலைச் சேர்ந்தவர் ஹக் நவாஸ். ராணுவ வீரர். காஷ்மீரில் உள்ள என்ஜினியர்கள் ரெஜிமென்ட்டில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் விடுப்பில் அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு அவர் மென்தார் தெஹ்சிலில் உள்ள மான்கோட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
தான் வீடு புகுந்து பலாத்காரம் செய்ததை யாரிடமாவது தெரிவித்தால் அவ்வளவு தான் என்று அவர் அந்த பெண்ணை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அவரின் மிரட்டலையும் மீறி அந்த பெண் ஹக் மீது போலீசில் புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹக்கை கைது செய்ய சென்றனர். ஆனால் அதற்குள் அவர் தலைமறைவாகிவிட்டார். போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications