டிவி சேனல் விவாதத்திற்கு கூப்பிட்ட அர்னாப் கோஸ்வாமிக்கு சேவாக் கொடுத்த பதிலை பாருங்கள் #sehwag
டெல்லி: பிரிட்டீஷ் பத்திரிகையாளருடனான டிவிட்டர் மோதல்கள் குறித்து நியூஸ் ஹவர் நிகழ்ச்சியில் விவாதிக்க கூப்பிட்ட டைம்ஸ் நவ் சேனலின் எடிட்டர் அர்னாப் கோஸ்வாமிக்கு சேவாக் கொடுத்துள்ள பதிலை பாருங்கள்.
ஒலிம்பிக் போட்டிகளில் வெறும் இரண்டு பதக்கங்களை வென்றதை இந்தியா கொண்டாடுவது அவமானமாக இல்லையா என்று இங்கிலாந்தை சேர்ந்த பத்திரிகையாளர் பியர்ஸ் மார்கன் ட்விட்டரில் கேள்வி எழுப்பி இந்தியர்களை வம்புக்கிழுத்தார். இதற்கு பதிலடி கொடுத்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்.
கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து இதுவரை ஒரு உலக கோப்பை கூட வாங்கவில்லை. இன்னமும் நீங்கள் கிரிக்கெட் ஆடுவது அசிங்கமாக இல்லையா என்று சேவாக் பதிலடி டிவிட் போட்டார்.

சவால் விட்ட பத்திரிகையாளர்
இதைத்தொடர்ந்து, பியர்ஸ் மார்கன், சேவாக்கிடம் சவால் விட்டு ட்வீட் போட்டார். அதில் அவர், ஹாய் சேவாக், இந்தியா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் முன்பு இங்கிலாந்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்லும் என ரூ.10 லட்சம் பெட் கட்டுகிறேன். சவாலை ஏற்கிறீர்களா? என கேட்டார்.

ஹாஹாஹா
இதை பார்த்த சேவாக் நீங்கள் எல்லாம் ஒரு மனுஷன்னு மதிக்க முடியாது என்பது போன்று பதில் ட்வீட் போட்டுள்ளார். சேவாக்கின் ட்வீட்: சிலருக்கு மோசமான ராசி, அவர்களுக்கு எல்லாம் பதில் இல்லை. ஹா ஹா ஹா ஹா என தெரிவித்தார்.

விவாதத்திற்கு அழைப்பு
இந்த டிவிட்டர் சண்டை நெட்டிசன்கள் மத்தியில் வெகுவாக பிரபலமானது. இதையடுத்து டைம்ஸ் நவ் எடிட்டர், அர்னாப் கோஸ்வாமி இதுகுறித்து விவாதிக்க சேவாக்கை ஸ்டூடியோவுக்கு கூப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கு சேவாக் மறுப்பு தெரிவித்துள்ளார்.
rnArnab Goswami wants me to speak on that British guys views on India on NewsHour,but that man doesnt deserve any airtime,hence I have denied
— Virender Sehwag (@virendersehwag) September 2, 2016
வொர்த் இல்லைங்க
இதுகுறித்து டிவிட்டரில் சேவாக் கூறுகையில், நியூஸ்-ஹவர் நிகழ்ச்சியில், பிரிட்டீஷ் நபர் குறித்து விவாதிக்க அர்னாப் என்னை அழைத்தார். ஆனால், அந்த நபர், டிவி சேனலில் விவாதிக்கும் அளவுக்கு வொர்த்தானவர் இல்லை என்பதால் நான் மறுத்துவிட்டேன். இவ்வாறு சேவாக் கூறியுள்ளார்.

ரசிகர்கள் குஷி
பெயரை குறிப்பிடாவிட்டாலும், பிரிட்டீஷ் பத்திரிகையாளர் குறித்துதான், சேவாக் விளாசியிருப்பதாக ரசிகர்கள் நினைத்து ரீ டிவிட் செய்து வருகிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications